வீடு கட்ட, வங்கிக் கடன் பெற ஆலோசனை வேண்டுமா..?

0

வீடு கட்ட, வங்கிக் கடன் பெற ஆலோசனை வேண்டுமா..?

கட்டுமானத்துறை ஒவ்வொரு காலத்திலும் சவாலான துறையாக இருக்கிறது. அதேநேரம் அத்தியாவசியமான துறையாகவும் கட்டுமானத்துறை உள்ளது. வாழ்வதற்கு வீடு, இயங்குவதற்கு தொழிற்கூடம், கற்பதற்கு கல்வி நிலையம் என்று அனைத்துமே கட்டுமானம் இன்றி இல்லை. இதனால் கட்டுமானத்துறை ஒவ்வொரு மனிதனுடைய அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.

மக்களின் வாழ்வின் அடிப்படை அங்கமாக இருக்கக் கூடிய கட்டுமானத் துறையில் மக்களுக்கு பல்வேறு வகையான சந்தேகங்கள், கேள்விகள், சவால்கள் இருக்கின்றன. இவையனைத்திற்கும் ஒட்டுமொத்த தீர்வாகவும் கட்டுமானத் துறையில் உள்ள பல்வேறு தகவல்களையும், சிறப்புகளையும், சலுகைகளை யும், விடைகளையும் திருச்சி மக்களுக்கு கிடைக்க உள்ளது.

எண்ணற்ற கேள்விகளோடு காத்திருக்கும் திருச்சி மக்களே 2021 டிசம்பர் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, திருச்சிராப்பள்ளி சென்டர் வழங்கும் ’பில்ட்ராக்’ – 2021 கட்டுமானப் பொருட்களின் ஒரு தனித்துவமான கண்காட்சி நடைபெறுகிறது.


சிமெண்ட் நிறுவனங்கள், கம்பி, வண்ண பெயின்ட், வாட்டர் குழாய், கழிப்பறை சாதனங்கள், டைல்ஸ், மாடல் கிச்சன், மோட்டார் பம்பு, மார்பிள்ஸ் & கிரானைட்ஸ், வீட்டிற்கான மின்சார உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள், கதவுகள் மற்றும் PVC ஜன்னல்கள், தீ பாதுகாப்பு சாதனங்கள், சூரியக் கருவிகள் & வெனீர் மரச்சாமான்கள், லிஃப்ட் & எலிவேட்டர், அலங்கார பொருட்கள், இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிசைனர்கள், ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள், ஓவியங்கள் மற்றும் சுவரோவியங்கள், கட்டிட இடிப்புகள், கட்டுமானத்துறை சார்ந்த அனைத்து வகையான நிறுவனங்களும் இந்த கண்காட்சியில் தங்கள் பொருட்களை காட்சிப் படுத்துகின்றன. இதன் வழியாக கட்டுமானத் துறையோடு மக்களுக்கு நேரடி அனுபவம் ஏற்படு கிறது. மக்களுக்கான சந்தேகங்களுக்கும் ஒரு தீர்வாக அமைகிறது.

மேலும் வங்கிகள், நிதி நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கேற்று பொதுமக்கள் வீடு கட்டுவதற்கான பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளை வழங்க உள்ளனர். மக்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க கருத்தரங் குகள் நடைபெறுகின்றன. அத்துடன் கட்டுமானத்துறையில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்ப பொருட்களும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன என்பது தனிச்சிறப்பு. இப்படி கட்டுமானத் துறையின் ஒட்டுமொத்த சந்தேகங்களுக்கும் ஒரே இடத்தில் தீர்வு சொல்கிறது பாரம்பரியமிக்க பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா திருச்சிராப்பள்ளி சென்டர்.

வருகிற டிசம்பர் 24,25,26 ஆகிய நாட்களில் திருச்சி, கரூர் பைபாஸ் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில், கட்டுமானத்துறையில் உள்ள உங்கள் சந்தேகங்களுக்கு பதில் காத்திருக்கிறது.

மேலும் விபரங்களுக்கு :
ஜெயந்த் குமார் எம்.மேத்தா, (CHAIRMAN), செல் : 95785 69955, எஸ்.பி.சுப்ரமணியன் (CO-CHAIRMAN), செல் : 80125 10006,
எஸ்.ஏ.முருகானந்தம் (CO-CHAIRMAN), செல் : 98429 69955, பி.ஏ.விஸ்வநாத் (TREASURER), செல் : 99762 41177

 

Leave A Reply

Your email address will not be published.