சொல்லுங்க சொல்லுங்க பதிலை சொல்லுங்க… முடி நரைப்பது எதனால்?
தென்னூர் நடுநிலைப்பள்ளி மாணவிகளுடன் ஒரு கலகலப்பான கலந்துரையாடல்
முடி நரைப்பது எதனால்? என்ற கேள்வியுடன் பள்ளிக்குழந்தைகளை சந்தித்தோம்.
தாத்தாவிற்கு முடிநரைக்கிறது. ஏன்? இது நம்முடைய கேள்வி
உங்கள் தாத்தாவிற்கு முடி நரைத்துள்ளதா?
ரோகிணி: ஆமாம். ஐயா. ஏன்? தெரியலை.
ஜெ.வர்ஜானா பேகம்: உங்கள் தாத்தாவிற்கு முடி நரைத்துள்ளதா?
என் அப்பாவிற்கே முடி கொஞ்சம் வெள்ளையாக உள்ளது.
ஏன் என்று தெரியலை. வயதானால் முடி நரைக்கும் என்கின்றனர்.
அஸ்லிமா பர்வின்: மெலானின் உற்பத்தி குறைவதனால் முடி நரைக்கும் ஐயா.
மிகவும் நல்லது என்று அவர்களை பாராட்டிவிட்டு,
அறிவியலை புரிந்து கொள்ளுங்கள் என்ற இந்த நிகழ்ச்சியில் மாணவிகளின் மகிழ்வான கலந்துரையாடலுடன் அவர்களிடம் இருந்து விடைபெறுகிறோம்.
-வெற்றிச்செல்வன்