ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திருச்சி கல்லூரியில் அஞ்சலி ! வீடியோ
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு திருச்சி கல்லூரியில் அஞ்சலி!
குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 12 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர்.
வீடியோ லிங்
இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தூய வளனார் கல்லூரியில் முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் சக வீரர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கல்லூரி செயலர் பீட்டர், முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர், தேசிய மாணவர் படை அதிகாரிகள் வில்சன் அரசு, பாஸ்டின் ஜெரோம், மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.