திருச்சி தூய வளனார் கல்லூரியில் வளனார் ஆண்டு நிறைவு விழா !

0
1

திருச்சி தூய வளனார் கல்லூரியில் வளனார் ஆண்டு நிறைவு விழா

திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரித் தமிழாய்வுத்துறை சார்பாகத் தூய வளனார் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.

விழாவிற்குக் கல்லூரி முதல்வர் அருள்தந்தை ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச.‌ தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்துறை பணிமுறை இரண்டின் ஒருங்கிணைப்பாளர் திருமிகு. சி.பாக்கிய செல்வரதி வரவேற்புரை வழங்கினார்.

2

கல்லூரிச் செயலர் அருள்முனைவர் செ.பீட்டர், சே.ச. முன்னிலை வகித்தார்.

அருள்தந்தை எஸ்.எம். செல்வராஜ், சே.ச.‌‌ வாழ்த்துரை வழங்கினார்.

தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியின் தமிழாசிரியரும் வீறுகவியரசர் முடியரசன் அவைக்களத்தின் செயலாளருமான முனைவர் ம. ஸ்டீபன் மிக்கேல்ராஜ் “வீரமாமுனிவர் போற்றும் வளனார்” என்ற மையப்பொருளில் சிறப்புரை வழங்கினார். இவர் சிறப்புரையில், தூய வளனார் யூபிலி ஆண்டில் கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் போப் பிரான்சிஸ் அறிவித்த ‘ஒரு தந்தையின் உள்ளத்தோடு’ என்னும் பொருண்மையில் அன்புக்குரிய, கனிவுநிறை, கீழ்ப்படிதலுள்ள, ஏற்றுக்கொள்கிற, படைப்புத்திற துணிவுள்ள, உழைக்கின்ற, நிழல்போன்ற தந்தை என்னும் ஏழு பொருண்மைகளில் வீரமாமுனிவர் படைத்த தேம்பாவணியில் தூய வளனாரை ஒப்பிட்டுக் காட்டிச் சிறப்புரையாற்றினார்.

இரண்டாவது அமர்வில் தமிழாய்வுத் துறைத்தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி அவர்கள் அறிமுகவுரையாற்றினார்.

“தமிழர்களின் வாழ்வை மேம்படுத்துவதில் அதிகம் பங்காற்றுவோர் இளையோரா? பெரியோரா?” என்னும் மையப்பொருளில் மாணவர் பட்டிமன்றம் நடைபெற்றது.

இப்பட்டிமன்றத்திற்குத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா தலைமை ஏற்றார்.

“இளையோரே!” என்னும் அணியில் மாணவர்கள் தி.பிரபு, பீ.லீ.தயாநிதி, அ.ஞா.உமா மகேஸ்வரி ஆகியோரும், “பெரியோரே!” என்னும் அணியில் வீ.அட்சயா, சே.ராபின்சன், பா.எழில் செல்வன் ஆகியோரும் உரையாற்றினார்.

நிறைவில் முனைவர் டேவிட் வில்சன் நன்றியுரையாற்றுகிறார். முனைவர் பட்ட ஆய்வாளர் கி.ஜோஸ். ஆல்வின் நிகழ்ச்சிகளை நெறியாள்கை  செய்தார்….

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வளனார் தமிழ்ப்பேரவைத் தலைவர் முனைவர் ஆ.மரிய தனபால் மற்றும் துணைத் தலைவர் இலா‌.சார்லஸ் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.