தபஸ் யோகா ஷாலா யோக சங்கல்பத்தின் வருடாந்திர நாள் 5 ஆம் ஆண்டு விழா

0
1
தபஸ் யோகா ஷாலா யோக சங்கல்பத்தின் வருடாந்திர நாள் 5 ஆம் ஆண்டு விழா
தபஸ் யோகா ஷாலா, யோக சங்கல்பத்தின் வருடாந்திர நாள், 5 ஆம் ஆண்டு விழா டிசம்பர்
2
5 ஆம் தேதி, 2021 சக்ரா ஹால்-ஸ்ரீ சங்கீதாஸ் ஹோட்டல் (சென்னை பைபாஸ்) திருச்சியில்
காலை 11:30 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முனைவர்வி.சுஜாதா,
முதல்வர், காவேரி கல்லூரி, திருச்சி, அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
விழாவை சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியை திருமதி.துர்கா மணிகண்டன், நிறுவனர், தபஸ்
யோகா ஷாலா-யோக சங்கல்பம் ஏற்பாடு செய்து, இந்த நிறுவனம் உணர்ச்சிமிக்க
ஒழுக்கத்தின் கடுமையான விடாமுயற்சி மற்றும் அற்புதமான விதை என்றும்,
அறிவுபூர்வமான உலகை உருவாக்குவது இதன் முக்கியத்துவம் என்று எடுத்துரைத்தார்.
துர்கா மணிகண்டன்  இன்று தபஸ் ஐந்தாவது ஆண்டு விழாவை
சிறப்பான முறையில் கொண்டாடுகிறது என்றும், தபஸின் பாடத்திட்டம், ராஜா யோகா,
கர்ம யோகா, ஞான யோகா மற்றும் பக்தி யோகா போன்றவற்றை பற்றியும் தெரிவித்து,
மகிழ்ச்சியான ஹார்மோன்களை செயல்படுத்த தினமும் பல்வேறு யோகா பயிற்சிகளை
மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விளக்கினார்.
மேலும் பிராப் யோகா, ஜோடி யோகா, சிலம்பம், நற்றுணை ஆவது நமசிவாயவே-சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் நாடகம், தேவாரம், திருமுறை பற்றியும் சுட்டிக்காட்டினார். மேலும் யோகா என்பது, உள்ளிருக்கும் மனித மனதின் ஆன்மாவின் எல்லையற்ற சக்தியைத் திறந்து திறனை அதிகரிக்கும் ஆழமான பயிற்சி என்றும் கூறினார்.
மேலும் உலகலாவிய அளவில் மலேசிய மாணவர்களும், சென்னை மற்றும் கோயம்புத்தூர்
மாணவர்களும்  துர்கா மணிகண்டன் அவர்களிடம் சிறப்பான முறையில் யோகா
பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
3

Leave A Reply

Your email address will not be published.