எழுத்தாளர் ஜவஹர் ஆறுமுகம் எழுதிய ‘காமராஜ் எனும் தமிழ் ஆளுமை’ நூல் வெளியீடு

0
1

எழுத்தாளர் ஜவஹர் ஆறுமுகம் எழுதிய ‘காமராஜ் எனும் தமிழ் ஆளுமை’ நூல் வெளியீடு

எழுத்தாளரும் பத்திரிகையாள ருமான ஜவஹர் ஆறுமுகம் எழுதிய ‘காமராஜ் எனும் தமிழ் ஆளுமை’ எனும் நூல் வெளியீட்டு விழா திருச்சி பெமீனா காவேரி அரங்கில் கடந்த மாதம் 21ம் தேதி நடைபெற்றது.

நூலைப் படிக்கும் இளைஞர்களில் இருந்து காமராஜ் போன்ற தலைவர்கள் உருவாக வேண்டும் என்ற உள்ளார்ந்த நோக்கத்தில் எழுதப்பட்ட இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.கோவிந்தராஜன் விழாவுக்குத் தலைமை வகித்தார்.

2

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் அவர்கள் பங்கேற்று நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். காமராசரின் ஆளுமைப் பண்புகளை மேற்கோளிட்டு அனைத்து அரசியல் தலைவர்களும் பின்பற்ற வேண்டிய ஆளுமைப் பண்புகளின் மொத்த உருவமென்கிற கருத்தை ஆழமாகப் பதிவு செய்தார். மேலும் விழாவில் திருச்சி வேலுசாமி, கவிஞர் த.இந்திரஜித், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், பேராசிரியர்
பெஞ்சமின் இளங்கோ ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

3

Leave A Reply

Your email address will not be published.