திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் கவிதையியல் பயிற்சிப் பட்டறை
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் கவிதையியல் பயிற்சிப் பட்டறை
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்துடன் இணைந்து திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழாய்வுத் துறை திருச்சிராப்பள்ளி கல்லூரி மாணவர் களுக்கான கவிதையியல் பயிற்சிப் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
தமிழாய்வுத்துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஒய்.டென்னிசன் தலைமையில் நடைபெற்ற இப்பயிலரங்கில் தமிழ்ப்பேரவைத் தலைவர் முனைவர் டே.கிறிஸ்துமணி வரவேற்புரை வழங்கினார்.
40 மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைந்த இப்பயிலரங்கில், ‘எல்லோரும் எழுதலாம் கவிதை’ என்ற மையப்பொருளில் கவிஞர் நந்தலாலா அவர்களும், ‘புதுக் கவிதை பார்வையும், பயணமும்’ என்ற மையப்பொருளில் கவிஞர் மு.முருகேஷ் அவர்களும், ‘நவீனக் கவிதையின் இன்றைய போக்குகள்’ என்ற மையப்பொருளில் கவிஞர் ஸ்டாலின் சரவணன் அவர்களும் தங்கள் கவிதை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி பயிற்சி வழங்கினர்.
மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் கல்லூரித் சுயநிதிப்பிரிவு துணைமுதல்வர் முனைவர் எஃப்.சாமுவேல் கிறிஸ்டோபர் வாழ்த்துரை வழங்கினார். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்களும், நூல்களும் வழங்கப்பட்டன.
நிறைவில் த.மு.எ.க.ச. திருச்சி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வி.ரங்கராஜன் நன்றியுரை வழங்கினார். முனைவர் சா.சாம் கிதியோன் மற்றும் முனைவர் கே.பாலின் பிரீத்தா ஜெயசெல்வி சிறப்பாக ஒருங்கிணைத்து பயிலரங்கை நடத்தினர்.