அன்றாட உணவு வடிவில் சிறுதானிய உணவுகள் திருச்சியில் கலக்கும் ஓ.எம்.ஜி ஃபுட்ஸ்

0

அன்றாட உணவு வடிவில் சிறுதானிய உணவுகள்
கலக்கும் ஓ.எம்.ஜி ஃபுட்ஸ்

இன்றைய இளம்தலைமுறையினர் சிறுதானியம் என்று கேட்டாலே விலகிச் செல்லும் நிலையில் அவர்கள் மத்தியில் சிறுதானியத்தை கொண்டு செல்லும் புதிய முயற்சியை கையிலெடுத்து இளம்தலைமுறையினர் விருப்பத்திற்கு ஏற்ப பாரம்பரிய உணவுகளை அன்றாட உண்ணும் உணவு வடிவில் கொடுத்து அசத்தி வருகிறார் திருச்சி, உறையூர் பகுதியில் ஓ எம் ஜி ஃபுட்ஸ் என்ற பெயரில் சிறுதானிய உணவு பொருட்களை விற்பனை செய்து வரும் ஜெயஸ்ரீ சுரேஷ். ஓ எம் ஜி ஃபுட்ஸ் குறித்து அவர் நம்மிடம் கூறுகையில்,

ஜெயஸ்ரீ சுரேஷ்
ஜெயஸ்ரீ சுரேஷ்

கொரோனா காலகட்டத்தில் சிறுதானிய உணவுகள் குறித்து நான் அறிந்தேன். வருங்கால தலைமுறையினருக்கு, நம்முடைய பாரம்பரிய உணவு குறித்தும், அதில் உள்ள சத்துக்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் நான் ‘ஓ.எம்.ஜி. புட்ஸ்’ என்ற பெயரில் சிறுதானிய உணவு பொருட்களை விற்கத் தொடங்கினேன்

வீடியோ லிங்:

பொதுவாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தோசையிலிருந்து எனது முயற்சியை தொடங்கினேன். ஆரம்பத்தில் தோசை, இட்லி ஆகிய இரண்டிற்குமான சிறுதானிய மாவு விற்பனையை தொடங்கினேன். தொடக்கத்தில் ராகி, கம்பு உள்ளிட்ட நான்கு வகைகளில் தோசை மாவினை தேவைக்கு ஏற்றாற் போல் தயார் செய்து கொடுத்து வந்தேன். தற்போது ஆப்ப மாவு, அடைமாவு, நீர் தோசை மாவு உள்ளிட்ட 35 வகைகளில் சிறுதானிய உணவு பொருளை தயாரித்து கொடுத்து வருகிறேன். நாட்டு சர்க்கரையை மட்டும் பயன்படுத்தி வெள்ளை சோளம் லட்டு, ராகி லட்டு, கம்பு லட்டு, சிகப்பு அரிசி லட்டு, மாப்பிள்ளை சம்பா லட்டு, குள்ளக்கார் லட்டு, கருங்குருவை லட்டு, காட்டுயானம் லட்டு, குடை வாழை லட்டு, மிக்ஸ்டு லட்டு, கருப்பு கவுன் லட்டு, ஃபைவ் ஸ்டார் லட்டு உள்ளிட்ட வகைகளில் லட்டு தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். லட்டு மிக்ஸாகவும் தருகிறேன். மேலும் சுற்றுச்சூழல் மாசு கெடாத வகையில் பாலிதீன் பைகளில் உணவு பொருட்களை வழங்கிடாமல் ஒவ்வொரு உணவினையும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாக்ஸில் வைத்து வழங்குகிறேன். ஒரு முறை அவற்றில் வாங்கிச் செல்வோர் மீண்டும் அதை எங்களிடம் கொடுத்து வேறு உணவினை அதற்கேற்ற ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வாங்கிச் செல்லலாம்.

வீடியோ லிங்:

சிறுதானியங்களை பயன்படுத்தி 80 வகையான உணவுப் பொருட்களை தயாரித்து தருகிறேன். குழந்தைகளும் இவற்றை விரும்பி சாப்பிடுவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு என்ன வடிவில் சிறுதானிய உணவு பொருட்களை கொடுத்தால் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப நாம் செய்து தர வேண்டும். பிரியாணியை குழந்தைகள் விரும்புகிறார்கள் என்றால் சிறுதானியங்களை பயன்படுத்தி பிரியாணியை போல் நாமே தயாரித்து வழங்கலாம்.

உணவே மருந்தாக உண்டு நமது முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். அதே போல் வருங்கால சந்ததியினரும் பாரம்பரிய தமிழ் உணவுகளை உண்டு ஆரோக்கியமாக ஒரு எதிர்கால சந்ததியினை உண்டாக்க வேண்டும் என்பதே என் ஆசை” என்கிறார் ஜெயஸ்ரீ சுரேஷ்.

-அஸ்வின்

Leave A Reply

Your email address will not be published.