பிசினஸ் திருச்சி தோழமையில் படைப்பாற்றல் பயிற்சிப் பட்டறை

0
1

பிசினஸ் திருச்சி தோழமையில் படைப்பாற்றல் பயிற்சிப் பட்டறை

பிசினஸ் திருச்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரி தமிழாய்வுத்துறை இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான படைப்பிலக்கியப் பயிற்சிப் பட்டறை ஒன்றை எதிர்வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

கல்லூரி முதல்வர் அருள்தந்தை முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர் தொடக்க விழாவில் பங்கேற்று, இப்பயிலரங்கைத் தொடங்கி வைக்கிறார். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி வரவேற்புரை வழங்குகிறார். முனைவர் பொன்.புஷ்பராஜ், திருமதி சி.பாக்கிய செல்வரதி, தமுஎகச திருச்சி மாவட்டத் தலைவர் வி.ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

2

கவிஞர் நந்தலாலா, கவிஞர் முத்து நிலவன், எழுத்தாளர் இரா.முருகவேள், கவிஞர் சக்திஜோதி மற்றும் பிசினஸ் திருச்சி ஆசிரியர் ஜெ.டி.ஆர் ஆகியோர் மை ஒருதுளி படைப்போ பெருவெள்ளம்!, காகிதமும் ஆயுதமே!, எழுதுகோலும் நெம்புகோலே!, தலையெழுத்தைக் களையெடுக்கும் எழுத்து! என்னும் தலைப்புகளில் உரையாற்றி மாணவர்களுடன் கலந்தாய்வு நடத்தி இந்தப் பயிற்சிப் பட்டறையை நடத்துகின்றனர்.

நிறைவுவிழாவில் இணைமுதல்வர் முனைவர் அலெக்ஸ் ரமணி வாழ்த்துரையாற்றுகிறார்.
பங்கேற்பாளர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கி, கல்லூரிச் செயலர்அருள்தந்தை முனைவர் செ.பீட்டர் நிறைவுரையாற்றுகிறார்.

பிசினஸ் திருச்சியின் உதவி ஆசிரியரும், தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியருமான முனைவர்ஜா.சலேத் இப்பயிலரங்கை ஒருங்கிணைக்கிறார்.

3

Leave A Reply

Your email address will not be published.