திருச்சி என்ஜினீயர் தூக்குப் போட்டுதற்கொலை.

0
1

என்ஜினீயர் தூக்குப் போட்டுதற்கொலை.

திருச்சி கோட்டை பகுதியில் உள்ள பெரிய செட்டி தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 29). என்ஜினீயரான இவர் ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் இவர் கடந்த 3 மாதமாக வீட்டில் இருந்தபடியே பணியாற்றினார். 26.11.2020 அன்றுஅவர் வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோட்டை போலீசார்  வழக்குப்பதிவு செய்து சரவணனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை

2

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 31). இவர்களுக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆகிறது. உடல்நல குறைவால் அவதி அடைந்து வந்த சரஸ்வதி சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் மாயம்

திருச்சி இ.பி.ரோடு ஜெகஜோதி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (42). இவரது மனைவி ராஜேஸ்வரி (33). இவர் திருச்சி மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சுப்புலட்சுமி (13), ராகினி (6) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். கணேசமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜேஸ்வரி மீண்டும் வீடு திரும்ப வில்லை. இது குறித்து கணேசமூர்த்தி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

 

மகளுக்கும் மருமகனுக்கும் தகராறு

திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரத்தை சேர்ந்தவர் வீரமணி (70). இவர் தனது மகளை அதே பகுதியை சேர்ந்த காமராஜ் (32) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் மகளுக்கும், மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறை தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த காமராஜ் மாமியார் வீரமணியை தள்ளிவிட்டுள்ளார். இதில் அவர் காயம் அடைந்தார். இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜை கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

 

அரியமங்கலம் வடக்கு உக்கடை இக்பால் முதல் தெருவை சேர்ந்தவர் முகமது உஸ்மான் (27). வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இவரது ேமாட்டார் சைக்கிளை திருடியதாக அரியமங்கலம் மலைப்பகுதியை சேர்ந்த தோக்கி என்கிற நாகூர் ஹனிபா (21) மற்றும் பாலமுருகன் (22) ஆகியோரை அரியமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

 

3

Leave A Reply

Your email address will not be published.