9 நூல்கள் (நவரசங்கள் )எழுதிய சேதுமாதவனுடன் ஒரு சந்திப்பு

0
1

9 நூல்கள் எழுதிய சேதுமாதவன்

தொடர்வண்டி பணியில் இருக்கிறார்.

பூர்வீகம்

2

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள சிற்றூர்

பெற்றோர்

அம்மா இறந்துவிட்டார். அப்பா கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரியாக கண்காணிப்பாளராக பணிபுரிந்தார்.

உடன்பிறந்தவர்கள்

ஒரு சகோதரர். நான்கு சகோதரிகள்

கல்வி

இளங்கலை இயற்பியல். பிஎல், எம்.ஏ. இதழியல், செய்திதொடர்பியல், எம்எஸ்ஸி உளவியல், படித்தேன்.

பணி

ரயில்வே துறை கணக்குத்துறையில் முதுநிலை அலுவலராக பணியாற்றுகிறேன்.

எழுத்தாளராக எப்படி பரிணமிக்கின்றீர்கள்?

பள்ளிப்படிப்பிலிருந்தே எனக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது, கல்லூரியில் படிக்கும்போது ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் இவர்களை படிக்கும் போது நாமும் ஏன் எழுதக்கூடாது என்று எனக்கு தோன்றியது. கவிதைகள் எழுதினேன். நான் எழுதிய கவிதை கல்லூரி ஆண்டுமலரில் வந்தது. அது எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது.

கல்லூரி படிப்பு முடிந்து வேலை தேடுகையில் நிறைய கவிதைகள் எழுதினேன்.

காதல் கவிதைகளா? சமூகம் சார்ந்ததா?

ஆரம்பத்தில் தினமலர், சுட்டிவிகடன் இவற்றில் எழுதினேன்.

காதல் கவிதைகள் வேலையில்லா திண்டாட்டம், முதிர்கன்னி பற்றி பின்னர் சமூகம் சார்ந்து எழுதினேன்.

முதல்படைப்பு

முதலில் தாய் இதழில் எனது கவிதை 1984-ல் வெளிவந்தது. முதல் படைப்பு 2003-ல் ஒரு ஹைகூ கவிதை வெளி வந்தது.

https://www.youtube.com/watch?v=7YO7mLw-GiI&t=6s

 

தலைப்பு

“பேனா முனையின் உரசல்” இது 72 கவிதைகளுடன் 32 பக்கங்களுடன் வெளி வந்தது.

ஒரு கவிதை  ஹைகூ கவிதை  சொல்லுங்களேன்?

திண்ணையில் வசித்த அப்பா வீட்டுக்குள் வந்தார் புகைப்படமாய்.

நெற்றியில் ஈ விரட்ட மனமில்லை. விதவைத்தாய்.

விருதுகள்

2009-ல் கவிதை நூல் வெளியிட்டேன். “புலன் விழிப்பு” என்று. திருச்சி மாவட்ட   நலப்பணி நிதிக்குழு அந்த ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான பரிசினை எனக்கு அளித்தது,

2010-ல் சமூகம் சார்ந்த சிறுகதை தொகுப்பு நூல் வெளியிட்டேன் அதற்கு விழுப்புரம் மாவட்டத்தில் பாரதியார் தமிழ்ச்சங்க விருது கிடைத்தது.

2014- ல் அதியமான் முதல் ஆங்கிலேயர் வரை என்ற வரலாற்று நூல் எழுதினேன். 4 அமைப்புகள் எனக்கு பரிசு அளித்தன. திருச்சியை மையமாக கொண்ட சோழ தேச வரலாறு.

எத்தனை நூல்கள் எழுதியுள்ளீர்கள்?

சிறுகதை -2 நூல்கள்,  கவிதை -5 நூல்கள், கட்டுரை – 2 நூல்கள்  எழுதியுள்ளேன்.

எழுத்துப்பாணி?

பார்த்த, சந்தித்த என் அனுபவங்களை புனைவு கலந்து எழுத்தாக்குகிறேன்..இதன் மூலம் சமூகத்திற்கு ஏதேனும் சேதி சொல்ல் விரும்புகிறேன்.

ஒரு பக்கம் பணி, ஒருபக்கம் நூலாசிரியர்? நூல் வெளியிடுவதற்கான பொருளாதாரம்?

நான் குறைந்த படிகள் மட்டுமே எடுத்து என் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுப்பேன். நூல் மதிப்புரைக்கு அனுப்புவேன். உள்ளூரில் சில கடைகளுக்கு தருவேன். வருமானம் அதிகம் இருக்காது. இருந்தாலும் ஆனால் பெயர் கிடைக்கும்.

ஒரு எழுத்தாளனாக இந்த சமூகத்திற்கு சொல்ல விரும்புவது?

வாசிக்கும் பழக்கத்தை சிறுவயது முதல் கொண்டு வரவேண்டும். தற்போதுள்ள சமூகம் செல்போன், இன்டர்நெட், இவற்றில் மூழ்கி இருக்கிறது. அதிலிருந்து மீண்டு வாசிக்க பழகினால் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து அடையலாம். இதனை நான் பெற்றோர்களிடம் வேண்டுகோளாக வைக்கிறேன்.

பெற்ற பரிசுகளும், விருதுகளும்

உலகத்தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தில் சிறந்த எழுத்தாளர் என்று 3வது பரிசை வழங்கியது. ஈரோட்டில் உள்ள சிகரம் சிற்றிதழ் வந்து கொண்டிருக்கிறது அந்த அமைப்பு பரிசு அளித்தது. சிவநேயப்பேரவை, வெண்மணி அறக்கட்டளையின் பரிசு, மருத்துவர் குமரேசன் ஒரு அமைப்பு வைத்துள்ளார் அந்த அமைப்பிலிருந்து ஒரு பரிசு இவை நான்கும் அதியமான் முதல் ஆங்கிலேயர் வரை என்ற நூலுக்கு கிடைத்தது.

இலக்கியப்பீடம் கவிதை நூலுக்கு பரிசு அளித்தது. நான் உரத்தசிந்தனை என்ற ஒரு அமைப்பில் உள்ளேன். அவர்கள் எனக்கு சிறந்த எழுத்தாளருக்கான பரிசு கொடுத்தார்கள். இலக்கிய பீட விருது கிடைத்துள்ளது. ஹைகூ கவிதைகளுக்கு நிறைய பரிசுகள் வாங்கியுள்ளேன். இது மட்டுமின்றி என்னுடைய தொடரும் பயணம் என்ற கட்டுரை பாரதிதாசன் பல்கலைக்கழக பாடப்பிரிவில் துணைப்பாடத்தில் இடம்பெற்றுள்ளது.

சமூகத்திற்கு தாங்கள் சொல்ல விரும்புவது?

எழுத்துக்கள் மூலம் நிறைய சொல்லலாம். அது கடல் மாதிரி. தற்போது நான் பாரதியார் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறேன். அது மட்டுமின்றி புதினங்கள் எழுதும் எண்ணம் உள்ளது.

பல்வேறு ஆளுமைகளை பதிவிடும் என்திருச்சி தற்போது ஆக்கமும், ஊக்கமும், எதிர்கால நோக்கமும் கொண்ட நவரச நூல்களைப்படைத்த ஒரு படைப்பாளியை சந்தித்த மகிழ்வில் அவரிடம் இருந்து விடைபெற்றோம்.

வெற்றிச்செல்வன்

,

 

 

 

 

 

 

 

 

 

3

Leave A Reply

Your email address will not be published.