செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி!

0
1

செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பாக கணினிக் கல்வியை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் வெள்ளிவாடி தொடக்கப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு உதவிக் கல்வி அலுவலர் திரு.க. மருதநாயகம் தலைமை வகித்தார். தமது உரையில், கிராம மாணவச் செல்வங்களின் செயல்முறை பயன்பாட்டிற்கு கணினி உபயோகப்படுத்தபடுவது தமக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது எனப் பதிவு செய்தார்,

செப்பர்டு விரிவாக்கத் துறை இயக்குநர் அருட்தந்தை பெர்க்மான்ஸ் சே.ச. இந்நிகழ்வில் பங்கேற்றுப் தொடக்கவுரையாற்றினார். அவர் தம் உரையில் மாணவச் செல்வங்கள் தற்கால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் கணினி தொழில்நுட்பக் கல்வியினை தொடக்கக் கல்வியிலே கற்பது சிறப்புக்குரியது என்று குறிப்பிட்டார்.

2

வெள்ளிவாடி, அரசு ஊராட்சி தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி. பி. ஹெலன் ராணி சிறப்புரையாற்றினார்.

வெள்ளிவாடி, வார்டு உறுப்பினர் திருமதி. ரஞ்சனா தேவி வாழ்த்துரை வழங்கினார்.

செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பாக, அருட்தந்தை பெர்க்மான்ஸ் சே.ச. அவர்கள் வெள்ளிவாடி அரசு ஊராட்சி தொடக்கப் பள்ளிக்கு கணிப்பொறி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வையொட்டி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வென்ற மாணவ மாணவிகளுக்கும் இந்நிகழ்வில் பரிசுகள் வழங்கப்பட்டன.

செப்பர்டு விரிவாக்கத் துறை இளநிலை ஒருங்கிணைப்பாளர் திரு. அ. அந்தோணி செல்வராஜ் சிறப்பாக இந்நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார்.

முன்னதாக மாணவர் அ. ஸ்ரீநாத் வரவேற்புரையாற்றினார். நிறைவில், மாணவர் அ. ராபின் ஜீவா நன்றியுரையாற்றினார். மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவர் அ. ஜோ பிரகாஷ் இந்நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

ஜோ.சலோ

3

Leave A Reply

Your email address will not be published.