
திருச்சி என்.ஐ.டி யில், கடந்த 24ம் தேதி பாரம்பரிய மையம் , நிர்வாகக் குழுத் தலைவர். பாஸ்கர் பட் , இயக்குநர் மற்றும் முன்னாள் மாணவர்கள் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது.
இம்மையம், என்.ஐ.டி திருச்சியின் 56 ஆண்டுக்காலத்தைப் பறைசாற்றுகிறது.
கடந்த காலத்தைப் பத்திரப்படுத்தி, தற்காலத்திற்கு வரலாறு மற்றும் சார்பு
குறித்த அறுபடாத உணர்ச்சியைத் தரும் அருங்காட்சியகங்கள் மற்றும்
ஆவணக்காப்பகங்கள் குறித்து பாஸ்கர் பட் நினைவுகூர்ந்தார்.
என்.ஐ.டி திருச்சி ஆர்.இ.சி.ஏ.எல் தலைவர் மகாலிங்கம், இதற்கான நிதியைத் திரட்டிய முன்னாள் மாணவர்களுக்கு நன்றி கூறினார்.
தற்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாகத் திகழும் இக்கழகத்தின் வளர்ச்சியைப் பறைசாற்றும் ஒலி-ஒளி சான்றாக அமைந்திருக்கும், இப்பாரம்பரிய மையத்திற்கான தேவையை இயக்குநர் முனைவர் மினி ஷாஜி தாமஸ் வலியுறுத்தினார்.

இதன் கட்டட வடிவமைப்பாளர் ஜோசப் ஆஸ்டின், இதில் கல்விசார் மற்றும் கலாச்சார வாழ்வு பல்வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைப்பற்றி கூறினார்.
நிறைவில் ‘தி ரோட் அஹெட்’ (முன்னால் உள்ள பாதை) என்ற
புத்தகம் வெளியிட்டது.
