பிலிப்பைன்ஸ் பழங்குடியினரின் ”குபிங்” இசையை வாசிக்கும் சவுண்ட் மணி

0
1

பிலிப்பைன்ஸ் கிங்காங் இசைக்கருவியைப்பற்றி பேச இருக்கின்றோம்.

அதென்ன சவுண்ட் மணி?

கல்லூரி நாட்களில் நண்பர்கள் விளையாட்டாக அழைத்தது. அப்படியே ஆகிவிட்டது. ஆனால் என்னுடைய பெயர் மணிகண்டன்.

2

பழங்கால இசைக்கருவிகளை இசைப்பதில் நீங்கள் வல்லவர் என கேள்விப்பட்டு வந்தோம்? பிலிப்பைன்ஸ் ‘குபிங்’ இசைக்கருவியைப் பற்றி கூறுங்களேன்?

நம் நாட்டில் பல்லவர்கள் இருப்பது போல், பிலிப்பைன்ஸில் பல்லவன் ட்ரைப்ஸ் இருக்கின்றனர். அவர்கள் பயன்படுத்தக்கூடிய குபிங் இசைக்கருவிதான் இது.

இது மூங்கில் பட்டையில் நெருப்பினால் எழுதப்பட்டிருக்கும். அதேபோல் நமக்கு நாக்கு இருப்பது போல், அதற்கும் ஒரு டங்க் இருக்கும்.

இதற்கென ஏதாவது வரலாறு உண்டா?

இதற்கென வரலாறு இல்லை. ஆனால் ஆதிகாலத்திலிருந்தவர்கள் இதில் வாசிப்பதன்(இந்த ஒலியினால்) மூலமாக தங்களுடைய காதல் மொழியை வெளிப்படுத்தினர்.

முகச்சங்கின் ஒலியை அடிப்படையாக கொண்டதுதான் இது. முகச்சங்கு முந்தையதா? இது முந்தையதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அதன் அடிப்படையில் ஆனது இது.

நவீன காலங்களில் இசை உலகில் பல்வேறு வகையான இசைக்கருவிகள் ஆளுமையில் இருக்கின்றன. ஆனால் இந்த இசைக்கருவி இன்னும் அதே வடிவினை தாங்கியே உள்ளது? எங்களுக்காக வாசியுங்கள் என்கிறோம்?

அவர் வாசித்துக்காண்பிக்கிறார். அந்த பட்டையை வாயில் வைத்துக்கொண்டு, இடதுகையால் பிடித்தவாறே வலதுகையால் தொடர்ந்து தட்டியபடி, வாயில் வரும் காற்றால் அதிலிருந்து இசை வருகிறது.

 

இதற்கென இசை மொழி எதாவது இருக்கிறதா?

இல்லை. நாமாக வாசிப்பதுதான். உங்கள் பெயரைக்கூட வாசிக்கலாம்.

உங்களது எதிர்கால் நோக்கம் என்ன?

வேறு வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள பழங்குடியினரின் இசைக்கருவிகளை கற்று, அதனை நம் நாட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கணும். ஏனெனில் இங்கிருந்துதான் அவையெல்லாம் மற்ற நாடுகளுக்கு சென்றன. இவ்வாறு செய்வதன் மூலம் மக்களின் மன அழுத்தத்தை இந்த இசையினால் மாற்ற முயல்கிறேன்.

மன அமைதியையும், சந்தோஷத்தையும் தரக்கூடிய இசையை, பிலிப்பைன்ஸ் பழங்குடியினரிடம் கற்று, அதன் இசையை இங்கு நம் தென் தமிழகத்தில் பரப்புரை செய்து வரும் சவுண்ட் மணியின் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு மனநிறைவுடன் விடைபெறுகிறோம்.

 

வெற்றிச்செல்வன்.

3

Leave A Reply

Your email address will not be published.