திருடனைப் பிடிக்க சென்ற திருச்சி எஸ்.ஐ வெட்டிப் படுகொலை !

1
1

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆடு திருட்டு சம்பவம் நடைபெறுவதாக காவல் நிலையத்தில் புகார் வந்திருக்கிறது. இதையடுத்து பணியில் இருந்த நவல்பட்டு உதவி ஆய்வாளர் பூமிநாதன் சம்பவ இடத்திற்கு சென்ற போது குறிப்பிட்ட சில நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது, மேலும் ஆய்வாளர் பூமிநாதன் அவர்களை பின்தொடர்ந்து பிடிக்கச் சென்றிருக்கிறார்.

இந்த நிலையில் கீரனூர் அருகே எஸ்.ஐ பூமிநாதனை சுற்றிய திருடர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர். போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவர் திருடனைப் பிடிக்க சென்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

2

மேலும் உடனடியாக மாவட்ட எஸ்பி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து இருக்கிறார். மேலும் இரண்டு டிஎஸ்பிகள், இரண்டு காவல் ஆய்வாளர்கள் தலைமையில், இரண்டு உதவி ஆய்வாளர்கள் கொண்ட 4 தனிப்படை அமைக்கப்பட்டு திருடர்களை உடனடியாக கைது செய்ய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

3
1 Comment
 1. Syed Aslam says

  *திருடர்களை பிடித்த திருச்சி எஸ்.ஐ வெட்டிக்கொலை… அதிகாலை பயங்கரம்…*

  திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயாக பணியாற்றியவர் பூமிநாதன் (56).

  நேற்றிரவு ரோந்து பணியில் இருந்த பூமிநாதன் நவல்பட்டு ரோட்டில் 3 டூவீலர்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை நிறுத்தினார். அவர்கள் டூவீலரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றனர்.

  ஆடுகளை திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதனை தெரிந்து கொண்ட எஸ்ஐ பூமிநாதன் அவர்களை டூவீலரில் விரட்டி சென்றார்.. அந்த ஆசாமிகள் திருச்சி- புதுக்கோட்டை மெயின்ரோட்டில் மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி என்ற ஊருக்கு அருகில் சென்ற போது ஓரு டூவீலரை தடுத்து நிறுத்திய எஸ்ஐ பூமிநாதன் அதில் இருந்த 2 திருடர்களை பிடித்தார்.

  இதனைத் தெரிந்து கொண்ட மற்ற 2 டூவீலர்களில் சென்ற நபர்கள் திரும்பி வந்து பூமிநாதனிடம் தங்களது சகாவை விடுமாறு கூறியுள்ளார். ஆனால் பூமிநாதன் முடியாது என கூற அவர்கள் வைத்திருந்த அரிவாளல் வெட்டினர். படுகாயமடைந்த எஸ்ஐ பூமிநாதன் சம்பவ இடத்திலேய பரிதாபமாக இறந்தார். திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர்.

  அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த சம்பவம் சுமார் 5 மணியளவில் தான் அவ்வழியாக நபர்கள் மூலம் தெரியவந்தது. ஆடுத்திருடர்களை பிடிக்க முயன்ற எஸ்ஐ வெட்டிக்கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Leave A Reply

Your email address will not be published.