திருச்சி சென் ஜேம்ஸ் பள்ளி ஆசிரியை சாலை விபத்தில் மரணம்!

0

திருச்சி எம்ஜிஆர் சிலை அருகே உள்ள பாரதிதாசன் சாலையில் இன்று காலையில் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வந்த ஆசிரியர் சாலை விபத்தில் பலி.

திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள சென் ஜேம்ஸ் பள்ளியில் நான்காம் வகுப்பு ஆசிரியராக உள்ள அங்கையர்கரசி என்பவர் இன்று காலை பள்ளிக்கு சென்றுக் கொண்டு இருந்தார். அப்போது திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அடுத்த பாரதிதாசன் சாலையில் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக  தனியார் கல்லூரி பேருந்து மோதியதில்  அங்கையர்க்கரசி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்.

இவர் திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சன்முகா நகர் பகுதியைச் சேர்ந்த என்பதும், இவருக்கு ஒரு மகள் உள்ளார் அவரும் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

st james

 

Leave A Reply

Your email address will not be published.