அனைத்து நாட்டு தலைவர்களைப் பாராட்டி நடைப்பயணம் கொண்ட ராணுவ வீரருக்கு திருச்சியில் வரவேற்பு!

0
1

கொரோனா அலை அதிகரித்த காலத்தில் தன் உயிரை பொருட்படுத்தாது உதவிய அனைத்து நாட்டு பிரதமர்கள், முதல்வர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் பாதுகாப்பு படையினர், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள், அனைத்து ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்தும் விதமாக 197 நாடுகளின் தேசியக்கொடியை சுமந்து பாலமுருகன் என்பவர் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் இவர் அசாம் ரைபிள் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இவர் கொரோனாவால் உயிரிழந்த அனைத்து நாட்டு மக்களையும நினைவு கூறும் நோக்கில் அணையா விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தி, மனித இனத்தைக் காக்க கோவிட் – 19 இரண்டாவது தடுப்பூசி அவசியம் மற்றும் கொரோனாவில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பாதுகாத்து கல்வி வழங்கிட வேண்டும் என்றும், நோயினை வெல்ல நாள்தோறும் உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து அவசியம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

2

இந்தப் பயணத்தில் திருச்சி மாவட்டத்திற்கு வந்தவரை மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் நீலமேகம் , சிலம்பம் அரவிந்த், தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஸ்குமார், நிர்வாகி ஆர்.கே.ராஜா மற்றும் ரெக்கார்டர் ஜெட்லி ஆகியோர் திருச்சி காவேரி பாலம் அருகில் 19.11.21 காலை 10.30 மணியவில் வரவேற்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.