வெங்காயம் உரிக்கும் போதும் கண்ணீர் வருவது எதனால்?

0
1

சொல்லுங்க  சொல்லுங்க பதில சொல்லுங்க….

நிகழ்ச்சிக்காக என்.திருச்சி சார்பாக (தென்னூர் நடுநிலைப்பள்ளி குழந்தைகளிடம்) உங்களை சந்திக்க வந்துள்ளோம். மாணவிகளே,

உங்கள் அனைவருக்கும் பிரியாணி பிடிக்கும் இல்லையா? அதுவும் பிரியாணியுடன் வெங்காயப் பச்சடி சேர்த்து சாப்பிட இன்னும் பிடிக்கும் இல்லையா?

2

அந்த வெங்காயத்தை நறுக்கும் போது ஏன் கண்களில் கண்ணீர் வடிகிறது. சொல்லுங்க  சொல்லுங்க பதில சொல்லுங்க….  குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் பதில் அளித்தனர். ஒரு மாணவி இதற்கு பதிலளிக்கையில் வெங்காயத்தில் உள்ள அப்ரோடைசியாக் என்ற அமிலம் ஆவியாவதால் கண்ணீர் வருகிறது என தெளிவாக சொன்னார்.

 

இவர்களுடன்  தென்னூர் நடுநிலைப்பள்ளி  தலைமையாசிரியர் விமலாவும் நம்முடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,  வெங்காயத்தை கண்ணீர் வராமல் உரிப்பதற்கான “டிப்ஸ்“ தந்தார்.

அதாவது வெங்காயத்தை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின் உரித்தால் கண்ணீர் வராது எனவும், பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்து பின் உரித்தாலும் கண்ணீர் வராது எனவும் சொன்னார்கள்.

எப்படியோ குழந்தைகளுடன் இனிமையாக பேசியபடி, அறிவியலையும் மக்களுக்கு  கொண்டு சென்ற மகிழ்வுடன் அவர்களிடமிருந்து விடைபெற்றோம்.

-வெற்றிச்செல்வன்

 

 

3

Leave A Reply

Your email address will not be published.