திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரி செப்பர்டு விரிவாக்கத்துறைக் கருத்தரங்கம்!

0
1

திருச்சி, செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை, நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி இணைந்து குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு “மனநல அடிமையிலிருந்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு” (போதையிலிருந்து விடுபடுங்கள்) என்கிற மையப்பொருளில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் உள்ள செயில் அரங்கத்தில் நடைபெற்ற
இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ம. ஆரோக்கியசாமி சேவியர், சே.ச. தலைமை வகித்தார். அவர் தம் தலைமையுரையில் விரிவாக்கத் துறையின் வழியாக கல்லூரி மாணவர்கள் தன்னார்வத் தொண்டுகளைக் கிராமங்களிலும், நகர்புறங்களிலும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டியுடன் இணைந்து செயல் படும் சமூகப்பணிகளை பற்றி பாராட்டினார்.

பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை இயக்குநர் முனைவர் மகேந்திரன் அறிமுகவுரையாற்றினார். கல்லூரி மாணவர்கள் தம் கல்லூரி காலங்களில் போதைக்கு அடிமையாகாமல், எதிர்கால நல் வாழ்விற்கு தங்கள் திறன்களையும், திறமைகளையும், வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

2

விரிவாக்கத் துறையின் இயக்குநர் அருட்திரு. பெர்க்மான்ஸ், சே.ச. மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி சிட்டி தலைவர் ரொட்டெரியன் ஜெரால்டு ஆரோக்கியராஜ் ஆகியோர் தங்களது வாழ்த்துரையாற்றினர்.

உளவியல் துறைத்தலைவர் அருட்திரு முனைவர் இம்மானுவேல் ஆரோக்கியம், சே.ச. தனது மைய உரையில், போதை என்றால் என்ன, அதற்கான காரணங்கள், காரணிகள், விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார். உரையைத் தொடர்ந்து மாணாக்கர்களின் ஐயங்களுக்கு பதில் அளித்தார்.

ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ரிக்ட் – 3000 உதவி ஆளுநர், ரொட்டேரியன் ஹேமலதா நடைமுறை வாழ்க்கையில் மாணவர்கள் ஊடங்களுக்குள் அடிமையாகாமல், அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி, மன நலமும், உடல் நலமும் பெற்று எதிர்கால வாழ்விற்கு தேவையானதை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பதிவு செய்தார்.

மரங்கள் நிறைந்த கோள்கள், பறவைகளுக்கு உணவளிப்போம்,; கோவிட் -19 விழிப்புணர்வு ஒவியம், மற்றும் வீடியோ ஆகிய இணைய வழி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

ரொட்டேரியன் சபாபதி, ரொட்டேரியன் சரவணன், ரொட்டேரிமன் மேகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்ற
இக்கருத்தரங்கிற்கு தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர். சி. ஆரோக்கிய தனராஜ் வரவேற்புரையாற்றினார். நிறைவில் வேதியியல் துறைப் பேராசிரியர் ராஜரத்தினம் நன்றியுரையாற்றினார்.
விரிவாக்கத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு. லெனின் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

120 நாட்டு நலப்பணித்திட்ட மாணாக்கர்கள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை விரிவாக்கத் துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசீலன் ஜோசப் கிறிஸ்து ராஜா, பூரண விஸ்வநாதன், ரொட்டெரியன் பிரபு, பாலாஜி, செல்வதுரை ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

– ஜோ.சலோ

3

Leave A Reply

Your email address will not be published.