எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரி மாணாக்கர்கள் YUTRY 2.0 முதல் பரிசை தட்டி சென்றனர்.

0
1

எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரி மாணாக்கர்கள் YUTRY 2.0 முதல் பரிசை தட்டி சென்றனர்.

“YUTRY 2.0” என்ற போட்டி திருச்சியிலுள்ள தேசிய கல்லூரியில் நடைபெற்றது. இதில் எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரி சார்பாக மாணவ மாணவிகள் ஐந்து  குழுக்களாக பங்கேற்று தங்களின் வணிக திட்டங்கள் பற்றிய கருத்துக்களை போட்டி நடுவர்களிடம் விளக்கினர். இதற்கு முன்னோட்டமாக எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரி முனைவர் எம்.ஹேமலதா இயக்குனர் மற்றும் பேராசிரியர்களான முனைவர் ஆர்.கார்த்திகா மற்றும் முனைவர் ஏ. கனிமொழி இவர்கள்  ஆலோசகர்களாக இருந்து மாணவ மாணவிகளின் வணிக திட்டங்களை பார்வையிட்டனர்.

2

முதல் குழு: “வாழ்வோம் வாழையுடன்”,இரண்டாம் குழு: “கிராமத்து கீரை” , மூன்றாம் குழு: “Every Care Beverages”, நான்காம் குழு:”GRANNY’s GIFT”,ஐந்தாம் குழு: “பை”. எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரி சேர்ந்த இக்குழு மாணவ-மாணவிகள் அவரவர்களின் தனித்துவ விற்பனை  உத்தியைப் பயன்படுத்தி சிறப்பான முறையில் போட்டி நடுவர்களான  திரு.செந்தில் நாதன், தலைமை நிர்வாக அதிகாரி-ஆழி பதிப்பாளர், திரு.ஜி.சுரேஷ் குமார், தலைமை நிர்வாக அதிகாரி & நிறுவனர்- மேக்ஆப் ஸ்டுடியோ, திரு.சி.கே.குமாரவேல், தலைமை நிர்வாக அதிகாரி- நேச்சுரல்ஸ் சலோன்ஸ் மற்றும் ஸ்பா, திரு.குமார் வேம்பு, தலைமை நிர்வாக அதிகாரி & நிறுவனர்- Go Frugal Technologies Pvt. Ltd, முன்பு சமர்ப்பித்தனர்.
எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரியில் இருந்து அரையிறுதி போட்டியில் 4 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் போட்டியின் இறுதி சுற்றில், “கிராமத்து கீரை” என்ற தலைப்பில் கீரைகளின் முக்கியத்துவம் பற்றியும் அனைத்து விதமான ஆர்கானிக் கீரைகளையும் பயன்படுத்தி கீரை முறுக்கு,  சாக்லேட்,  தின்பண்டங்கள், இட்லி பவுடர் மற்றும் கீரைக் கலவை சாத பவுடர் இவைகளின் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றியும் திறம்பட எடுத்துரைத்த எம்.ஏ.எம்.மேலாண்மை கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணாக்கர்கள் சஞ்சய் கிருஷ்ணன்.சி தலைமையில், கவுசல்யா.ஜி , அருண்ராஜ்.கே, மற்றும் ஐஸ்வர்யா.எம் ஆகியோர் முதல் பரிசை வென்றனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எம்.ஏ.எம் மேலாண்மை கல்லூரி முனைவர் எம்.ஹேமலதா இயக்குனர் மற்றும் பேராசிரியப்பெருமக்கள் அனைவரும் வாழ்த்தினை தெரிவித்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.