காதுகளில் ஏற்படும் வலியை நீக்குவதற்கான சில எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

0
1

காது வலி என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் அது பெரிய தொந்தரவாக இருக்கும். அதனால் தான் குழந்தைகளுக்கு காது வலி ஏற்படும் போது உடனடி சிகிச்சைக்காக அவர்களை மருத்துவர்களிடம் அழைத்து வருவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகளை தான் கிருமிகளும், சளியும் வேகமாக தாக்கும். அதே போல் குழந்தைகளுக்கு தான் நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியானது அதிகரித்துக் கொண்டு இருக்கும். அதனால் குழந்தைகளுக்கு தான் பெரும்பாலும் காது வலி ஏற்படுகிறது.

                 
காது வலி ஒரே சீராக, தொடர்ச்சியாக இருக்கும் அல்லது அதிகரிக்கலாம் அல்லது படிப்படியாக குறையலாம். இந்த வலி வலிமையாக இருக்கலாம், லேசாக இருக்கலாம், எரிச்சல் தன்மையுடன் இருக்கலாம் அல்லது துடிக்க வைக்கும் அளவிலும் இருக்கலாம். காது வலி மிகவும் கடுமையானது. அதை முளையிலேயே தவிர்க்க வேண்டும்காது வலி சளிப்பிடித்து அல்லது பாக்டீர்யா மற்றும் வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டால், கீழ்காணும் வைத்தியங்களை செய்துபார்க்கலாம்.  நீங்கள் மருத்துவரை சந்தித்து அவர் சரியான மருந்தை பரிந்துரைக்கும் வரை வலி குறைந்து விடாது தானே! அதனால் அது வரை சிறந்த வீட்டு சிகிச்சைகளை நாம் பின்பற்றலாம். தொற்று அல்லது அழற்சி போன்ற பொதுவான அறிகுறிகளை நீக்கவும் இந்த எளிய வீட்டு சிகிச்சைகள் உதவும்.

இவ்வைத்திய அறிவுரை அனைத்தும் நிரந்தர தீர்வை அளிக்காது. காது வலி மிகவும் அதிகமாக இருந்தால் மருத்துவரை நாடுவது அவசியம்.

2

ear pain

வெதுவெதுப்பான ஒத்தடம் 

வெதுவெதுப்பான ஒத்தடம் காது வலியை குறைக்க பெரிதும் உதவும்

 • அதன் வெப்பம் நிவாரணத்தை அளிக்கும்
 • வீக்கம் இருந்தால் வற்றி விடும்
 • சளியினால் ஏற்பட்டுள்ள காது வலி என்றால், அந்த வலியை குறைக்க உதவும். 

மூக்கை சுத்தப்படுத்துங்கள் 

உங்களுக்கு மூக்கடைப்பும் காது வழியும் சேர்ந்து இருந்தால், அது சளியினால் இருக்கலாம். மூக்கை சுத்தப்படுத்தினால், கீழ்கண்ட பயன்கள் கிடைக்கும்.

 • சுவாச பாதையில் இடைஞ்சல் இல்லையென்றால் காதில் ஏற்பட்டுள்ள அழுத்தம் குறையும்.
 • இது வலியை குறைக்க உதவும்.

  வெங்காயத்தின் பயன்பாடு

அழற்சியில் இருந்து விடுபட நீங்கள் வெங்காயத்தை ஒரு பேஸ்ட்டாக பயன்படுத்தலாம். வீக்கத்தால் உங்களுக்கு காது வலி ஏற்பட்டிருந்தால்

 • வெங்காய மற்றும் தண்ணீரை கொண்டு பேஸ்ட் செய்யவும்.
 • இந்த பேஸ்ட்டை காதின் வெளிப்பகுதிகளில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

  பூண்டு

உங்களிடம் ஆலிவ் எண்ணெய் இல்லையென்றால் கீழ்கூறிய சேர்க்கையை பயன்படுத்தலாம்

 • பூண்டு எண்ணெயின் கலவை
 • நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடவும் அழற்சியை குறைக்கவும் இந்த கலவை உதவும்.

  லாவெண்டர் எண்ணெய்

உங்களுக்கு வெளிப்புற காதுகளில் எரிச்சல் இருந்தால்,

 • வெளிப்புற காதுகளில் லாவெண்டர் எண்ணெய்யை ஊற்றி மெதுவாக தடவவும்
 • இது மென்மையாக ஒத்தனம் கொடுப்பதை போல் இருக்கும். இதனை நாள் முழுவதும் செய்யலாம்.

  காதை வேகமாக அசைப்பது

கீழ்கூறிய வகையில் காதை வேகமாக அசைத்தால், குழந்தைகளுக்கு சற்று நிவாரணியாக அது அமையும்:

 • கொட்டாவி விடுதல் அல்லது காதை வேகமாக அசைத்தால், காது இணைப்புக் குழலில் உள்ள அழுத்தம் நீங்கும்
 • அழுத்தம் நீங்குவதால், தேங்கியிருந்த நீர் வெளியேறும்.

  ஆவியும் யூகலிப்டஸ் தைலமும்

மூக்கு குழாய்கள் மற்றும் காதுகளில் சேர்ந்திருக்கும் நீரை வெளியேற்ற 

 • நீரை கொதிக்க வைத்து, அதில் கொஞ்சம் யூகலிப்டஸ் தைலத்தை ஊற்றுங்கள்.
 • ஆவி பறக்கும் இந்த தண்ணீரை சுவாசித்து, அடைப்பட்டிருக்கும் நீரை இந்த எண்ணெய் வெளியேற்ற உதவும்.

  வைட்டமின் உட்கொள்ளுதலை அதிகரித்தல்

 சளியினால் காதில் வலி ஏற்படுத்தால், உங்களின் உணவில் இவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 • வைட்டமின்
 • வைட்டமின் சி
 • வைட்டமின்

இதன் விளைவுகள் மறைமுகமாக இருந்தாலும் கூட, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இது வலுவடையச் செய்யும்.

உப்பு
            உப்பை சூடு செய்யவும். வெது வெதுபான பதத்தை அடைந்தவுடன் பஞ்சை அதில் முக்கி எடுக்கவும். இதைக் காதில் 10 நிமிடத்திற்கு வைத்தால் ஈரப்பதத்தை உரிஞ்சி காதில் ஏற்பட்ட வீக்கம் குறையும்

தாடை பயிற்சிகள் 

காதுகளின் வாயை திறப்பதற்கு கீழ்கூறிய எளிய படிகளை நீங்கள் பின்பற்றலாம்

 • மேலும் கீழுமாக தாடைகளை வேகமாக ஆட்டவும்
 • இதனை தினமும் செய்தால், அடைபட்டிருக்கும் காதின் வாய் திறந்து விடும்.

என்ன செய்யக்கூடாது?

நம்முடைய காதுகளுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்னும் திரவம் சுரந்து கொண்டிருக்கிறது. அப்படி சுரப்பதனால் காதுக்குள் சேருகின்ற அழுக்குகள் ஒரு கட்டத்துக்கு மேல் தானாக வெளியே வந்துவிடும். அதனால் காதுக்குள் குச்சியோ, பட்ஸ் போன்ற எந்த பொருள்களையும் உள்ளு விட்டு சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் உபத்திரவம் செய்யக்கூடாது.
நம்முடைய காதுகள் 80 தல் 85 டெசிபல் வரையிலும் இருக்கின்ற சத்தத்தைத் தாங்கிக் கொள்ளும். அதற்கும் மேல் சத்தம் நம்முடைய செவிப்பறைகளை எட்டுகிற போது, அந்த அதிக சத்ததத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சவ்வு கிழிந்துவிடும்.சிலர் காதில் இயர்போளை எப்போதும் மாட்டிக் கொண்டே இருப்பார்கள். சிலரோ பாட்டு கேட்டுக் கொண்டே அப்படியே இயர்போனோடு தூங்கிவிடுவார்கள். அதிக சத்தம் வெளிவரும் வீடியோ கேம், படம் பார்ப்பது, செல்போன் பேசிக் கொண்டிருப்பது ஆகியவை காதுகளில் பெரும் வலியை ஏற்படுத்தும். அதனால் ஒரே காதில் வைத்துப் பேசக்கூடாது. அவ்வப்போது காதுகளை மாற்றி மாற்றி பேச வேண்டும்.

இதுவே காதில் ஏதேனும் பூச்சி நுழைந்துவிட்டால் சில சொட்டு தேங்காய் எண்ணெயையோ அல்லது நல்லெண்ணெயையோ விட்டால் பூச்சி இறந்துவிடும். ஆனால் எண்ணெயை சூடுபடுத்தி ஊற்றக்கூடாது.

தலையை லேசாக சாய்த்து வைத்திருந்தாலே பூச்சி தானாக வெளியே வந்துவிடும்.

இந்த விஷயங்களையெல்லாம் முதலில் கவனத்தில் வைத்துக் கொண்டு செயல்படுவது மிக முக்கியம்

காதின் நலன் காக்க

 1. அடிக்கடி சளி, ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும.
 2. பென்சில், பேனா, பட்ஸ், குச்சி என்று கண்டகண்ட பொருட்களை வைத்துக் காதைக் குடையக்கூடாது.
 3. குளிர்ந்த நீரும் குளிர் பானங்களும் காதின் பாதுகாப்பைக் கெடுக்கும் என்பதால், இவற்றைக் குறைத்துக்கொள்வது நல்லது.
 4. காதுக்கும் மூக்கிற்கும் தொடர்பு உள்ளது. அடிக்கடி மூக்கை பலமாகச் சிந்தினால் காது கேட்பது குறையும். எனவே, மூக்கை பலமாகச் சிந்தக்கூடாது.
 5. காதுக்குள் காய்ச்சிய எண்ணெயை ஊற்றக்கூடாது.
 6. சைனஸ், டான்சில் போன்றவற்றுக்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
 7. காதுகளில் வாக்மேன், ஹெட்போன் அணிந்தாலும் மிகவும் குறைந்த அளவில் வைத்துக் கேட்க வேண்டும்.
 8. சுற்றுவட்டாரத்தில் அதிக இரைச்சல் இருந்தால், காதில் பஞ்சை வைத்துக்கொள்ள வேண்டும்.
 9. தொடர்ந்து செல்போனில் பேச நேரும்போது ஒரு காதிலிருந்து மறு காதுக்கு மாற்றி மாற்றிப் பேசுவது நல்லது
 10. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
 11. தினமும் தியானம் செய்வது காது இரைச்சலைத் தடுக்க உதவும்.
 12.  மதுவும் புகைப்பிடிப்பதும் காதின் நலனைப் பாதிக்கும். இந்த இரண்டுக்கும் விடைகொடுங்கள்.

 

DR.NANDHINI V MOHAN-BNYS,M.Sc(Psy)

DR.NANDHINI V MOHAN-BNYS,M.Sc(Psy)

NVM DIET AND LIFESTYLE CLINIC

THANJAVUR – 613001

 

3

Leave A Reply

Your email address will not be published.