சுகாதாரமின்றி காணப்படும் திருச்சி அரசு மருத்துவமனை:

சுகாதாரமின்றி காணப்படும் திருச்சி அரசு மருத்துவமனை:
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் சிசு தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தின் முன்பகுதியில் சாக்கடை தண்ணீர் ஓடிக் கொண்டு சுகாதாரமற்ற முறையில் நோய் பரவும் அபாயத்துடன் உள்ளது.

தற்போது மழைக்காலம் என்பதால் கழிவு நீருடன் மழை நீரும் கலந்து பாசி படிந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இந்தத் தண்ணீரில் கொசுக்கள் அதிகளவில் உருவாக வாய்ப்பு உள்ளதால், நோய்த்தொற்று ஏற்படும் ஆபத்தும் உள்ளது. மேலும் குப்பைகளும் சரிவர அல்லாமல் ஆங்காங்கே கிடைக்கின்றது.
மரியாதைக்குரிய மகப்பேறு கட்டிடம் நோய் பரவும் நிலையில் காணப்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
