மக்கள் உயிருடன் விளையாடும் தேசிய நெடுஞ்சாலைத்துறை:

0
1

மக்கள் உயிருடன் விளையாடும் தேசிய நெடுஞ்சாலைத்துறை:

Helios

திருச்சி கரூர் நெடுஞ்சாலையில் அந்தநல்லூரிலிருந்து கொடியாலம் வரையிலான 1500 மீட்டர் சாலை உரிய பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக ஆபத்தான பள்ளங்களுடன் காணப்படுகிறது.

இந்நிலையில் அந்தநல்லூர் ஊராட்சி தலைவர் 100 நாள் பணியாளர்களை வைத்து தற்காலிகமாக பள்ளங்களில் மண்களை கொட்டி சரி செய்து உள்ளார்.

இதுகுறித்து அந்தநல்லூர் ஊராட்சி தலைவரிடம் கேட்டபோது

2

இப்பகுதியில் அரைவட்ட சுற்றுச்சாலை பணியானது 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் பல்வேறு நிலச்சிக்கல் காரணமாக  விவசாய சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டு திட்டமிட்டபடி முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டது.  அதன்பிறகு வழக்கு முடிவுக்கு வந்த நிலையிலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்தநல்லூரிலிருந்து கொடியாலம் வரையிலான 1500 மீட்டர் சாலை கடந்த 10 வருடங்களாக உரிய பராமரிப்பின்றி இருக்கின்றது.

வருடந்தோறும் மழைக்காலத்தில் இச்சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. மேலும் சுற்றுலாத் தளமான முக்கொம்பிற்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள்  இச்சாலையில் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன விபத்துக்கள் அதிக அளவில் நடக்கின்றன.

தொடர் மழை காரணமாக
தற்போது சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு ஆபத்தான விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. ஆகையால் வேறு வழியின்றி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களில் மண்ணை கொட்டி தற்காலிகமாக சரி செய்துள்ளோம்.

இந்த பிரச்சனை குறித்து நெடுஞ்சாலை துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம் என அந்தநல்லூர் ஊராட்சி தலைவர் பிரியங்கா ஆ.வே.ஆனந்தன் நம்மிடையே கூறினார்.

ஒரு நாளைக்கு பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இச்சாலையில் அரசு மெத்தனம் காட்டி வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

-தன்ஷிதா

3

Leave A Reply

Your email address will not be published.