திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு 2 பேர் இறப்பு

0
1

திருச்சி திருவெறும்பூர், ரெயில்வே தண்டவாளத்தில் 7ம் தேதி இரவு  50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

இவர் 7ம் தேதி இரவு 11 மணியளவில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது தஞ்சாவூரில் இருந்து கோவை சென்ற செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இறந்துள்ளார்.

வெள்ளை-சிவப்பு நிறமுடைய டி-ஷர்ட்டும், பிரவுன் கலர் டவுசரும், கழுத்தில் கருப்பு கயிறும் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

2

மற்றொரு சம்பவம்

திருச்சி ஓயாமரி காவிரி பாலத்தின் கீழ் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க நீல நிற கட்டம் போட்ட லுங்கியும், வெள்ளை நிற பூ போட்ட சட்டையும் அணிந்த ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

அவர் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3

Leave A Reply

Your email address will not be published.