நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு திருச்சியின் எதிர்பார்ப்பு பூர்த்தியானது – ஜங்ஷன் பாலத்திற்கு இடம்  ஒதுக்கீடு !

0
1

திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பல ஆண்டுகளாக பணி நிறைவு பெறாமல் இருந்தது. இப் பணி நிறைவு பெற இந்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 0.663 ஏக்கர் நிலத்தை தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பாலம் கட்டுவதற்கான கட்டுமானப் பணி தொடங்கும் முன்பு இருந்தே நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டது.

2
4

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டார். மேலும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் இப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். இதற்காக பாதுகாப்புத் துறையின் பல்வேறு நிலையில் உள்ள அதிகாரிகள் பலரையும் தொடர்பு கொண்டு தொடர்ந்து வலியுறுத்தினார். அதோடு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரையும் நான்கு முறை நேரில் சந்தித்து இதுகுறித்து பாலக் கட்டுமான பணிக்கு இடம் வழங்க வலியுறுத்தினார்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர்

இந்த நிலையில் பாலக் கட்டுமான பணிக்கு இடம் ஒதுக்குவதற்கான அரசாணை அரசு வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் நிலுவையில் நிற்கிற பாலத்தின் பணிகளை தொடங்குவதற்கு (Grant of working permission) ஆணை வழங்கப்பட்டுள்ளது. என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு நாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.