மழையில் வீடு வீடாகச் சென்று கோரிக்கைகளை கேட்ட எம்எல்ஏ இனிகோ !

0
1

திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. காவேரி கொள்ளிடம் போன்ற ஆறுகள் விரைவாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட கொட்டப்பட்டு புதுக்கோட்டை மெயின் ரோடு, ஜீவா தெரு, இந்திரா நகர், ஜே.கே. நகர், அமராவதி தெரு, சிந்து தெரு,மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கொட்டும் மழையில் நேற்று (8.11.2021) அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்தார், மேலும் வீடு வீடாகச் சென்று மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார், அதோடு மழை நீர் உடனடியாக வடிவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார்.

2

மேலும் நிர்வாக பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர் தயாநிதி, உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம், உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர் தலை விரிச்சான், கலைஞர் நகர் பகுதி பொறுப்பாளர் மணிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.