திருச்சி பெல் ஊழியரின் மனைவி கொலை-குற்றவாளிக்கு ஆயுள்

0
1

திருச்சி திருவெறும்பூர் பெல்நிறுவனத்தில் பணியாற்றிய மேலகுமரேசபுரத்தைச் சேர்ந்த நாதமணியின் மனைவி சாந்தி (48). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

சாந்தி அப்பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை பார்த்துக்கொண்டுதோடு, சேலை மற்றும் நைட்டி விற்பனை செய்தும் வந்துள்ளார்.

2

அதே பகுதியில் வசிக்கும் ராமதுரையின் மனைவி பூங்குழலி (33)  ரூ.12 ஆயிரம் மதிப்பிற்கு கடனாக துணி வாங்கியுள்ளார். பணத்தை தருமாறு சாந்தி அடிக்கடி கேட்டுள்ளார். ஆனால் பூங்குழலி பணத்தை கொடுக்கவில்லை.

கொலை

கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ந் தேதி பணம் தருவதாக அழைத்த பூங்குழலி, வீட்டில் கட்டிட வேலைக்கு பயன்படுத்தும் சாந்து கரண்டியால் தலையில் தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது கம்மல் மற்றும் சங்கிலி உள்ளிட்ட 5 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளார்.

பின்னர் வீட்டின் பின்பகுதியில் தென்னை மரம் நடுவதற்காக  தோண்டிய குழியில் உடலை போட்டு, அதன்மேல் தார்ப்பாய் போட்டு மூடிவிட்டு, தலைமறைவாயினார்.

4

தனது மனைவியை காணவில்லை என்று சாந்தியின் கணவர்  திருவெறும்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

கைது

2 தினங்களுக்கு பின் ராமதுரையின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்ததன் பேரில் திருவெறும்பூர் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, சாந்தி கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது. விசாரணையில், சாந்தியை கொலை செய்தது பூங்குழலி தான் என்பது தெரிய வர பூங்குழலியை கைது செய்து  போலீசார் சிறையில் அடைத்தனர்.

தீர்ப்பு

திருச்சி மகிளா கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீவத்சன் முன்னிலையில்  இதுதொடர்பான வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் அருள்செல்வி ஆஜர் ஆனார். சாட்சி விசாரணைகள் முடிவடைந்த நிலையில் 8ம் தேதி தீர்ப்பு கூறப்பட்டது.

தீர்ப்பில்,கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், நகைகளை திருடிய குற்றத்துக்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும், சாட்சியங்களை அழிக்க முயன்ற குற்றத்துக்காக ஒரு ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

3

Leave A Reply

Your email address will not be published.