திருச்சி பூங்காவில் காதலர்களிடம் வழிப்பறி கொள்ளை மைனர் சிறுவர்கள் !

0
1

 

திருச்சியில் பூங்காவில் காதலர்களிடம்  வழிப்பறி செய்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் தாலுகா, கீழகடம்பூர் காமராஜர் வீதியை சேர்ந்த சகாதேவனின் மகன் பாலவிநாயகம் (வயது 21). கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர், தீபாவளி விடுமுறை முடிந்து கடந்த 5-ந் தேதி தனது காதலியை பார்ப்பதற்காக திருச்சிக்கு வந்தார். அன்று இரவு 8.30 மணி அளவில் தனது காதலியுடன் திருச்சி உய்யகொண்டான் வாய்க்கால் அருகே உள்ள டைகர் பூங்கா முன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
2
அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பால விநாயகத்தை கத்தியால் முகத்தில் தாக்கி, அவரிடம் இருந்த ரூ.850 மற்றும் 2 விலை உயர்ந்த செல்போன்களையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி அரசு ஆஸ்பத்திரி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கே.எம்.சிவக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பாலவிநாயகத்தை தாக்கி செல்போனை பறித்துச்சென்றது, திருச்சி புத்தூர் திரு.வி.க.நகரை சோ்ந்த சேட்டு மகன் ஜாகீர்உசேன் (26), மோகன்தாஸ் மகன் சிவக்குமார் என்ற சிவசங்கர் (19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த 15, 16, 17 வயதுடைய 3 சிறுவர்கள் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 5 பேரையும் கைது செய்த போலீசார் ஜாகீர்உசேன், சிவக்குமார் என்ற சிவசங்கர் ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 3 சிறுவர்களும் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது மைனர் திருடர்கள் பெரிய ரவுகள் போன்று மிரட்டி வழிப்பறி செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள… அந்த பகுதி குடியிறுப்புகள் அதிகம் இருக்கும் அந்த இடத்திலே நடந்து தான் போலிசார் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சமீபத்தில் தான் இந்த பூங்கா கடந்த ஆட்சியில் பல கோடி ரூபாய் செலவு செய்யபட்டது .நீண்ட நாள் திறந்து வைக்கப்படாமல் இருந்தது தற்போது  திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.    

 

Trichy SmartCity Scheme  Uyyakondan

Tiger Park  Trichy Tamilnadu  India

3

Leave A Reply

Your email address will not be published.