திருச்சி அருகே வெடிகுண்டு புரளியை கிளம்பிய மாணவனால் பரபரப்பு:

0
1

திருச்சி அருகே வெடிகுண்டு புரளியை கிளம்பிய மாணவனால் பரபரப்பு:

தீபாவளி பண்டிகை (4/11/2021) அன்று சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பில் மர்ம நபர் ஒருவர் முசிறி பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், மதியம் 1 மணி அளவில் வெடிக்கும் எனவும் கூறினார்.

இதனையடுத்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவின் பேரில், சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் குழுவினர் மோப்ப நாய் மற்றும் அதிநவீன கருவிகளுடன் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

2

மேலும் சோதனையின் போது பேருந்து நிலையத்திற்குள் அனைத்து கடைகளும் உடனடியாக மூடப்பட்டது அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் சோதனையின் பின்பு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் முசிறி பகுதியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் என்பதும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த மாணவனை பெற்றோரிடம் ஒப்படைத்து உரிய சிகிச்சை அளிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

3

Leave A Reply

Your email address will not be published.