ஸ்ரீரங்கம் கோவிலில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்:

0
1

ஸ்ரீரங்கம் கோவிலில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் 7 நாட்கள் கொண்டாடப்படும். அதேபோல, இந்தாண்டு ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் இன்று 6ம்-தேதி தொடங்கி வருகிற 12-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

2
4

ஊஞ்சல் உற்சவத்தின் முதல் நாளான இன்று மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார்  மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைகிறார் . ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 9 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார் .

ஊஞ்சல் உற்சவ நாட்களில் காலை 6.30 மணிமுதல் காலை 7.30 மணிவரை , காலை 9 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை , மாலை 5.30 மணிமுதல் இரவு 8.30 மணிவரை மூலவர் சேவை உண்டு . மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் , இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது .

3

Leave A Reply

Your email address will not be published.