திருச்சி அருகே வாலிபர் குடிபோதையில் ரகளை: 4 பேருக்கு அரிவாள் வெட்டு:

0
1

திருச்சி அருகே வாலிபர் குடிபோதையில் ரகளை: 4 பேருக்கு அரிவாள் வெட்டு:

முசிறி அருகே அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (30). இவர் சதீஷ் மற்றும் சில நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது.

2
4

இந்நிலையில் குடிபோதையில் சதீஷ் மற்றும் பழனிச்சாமி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதீஷ் நேற்று (5/11/2021) இரவு 10 பேருடன் சென்று பழனிச்சாமியை அரிவாளால் வெட்டினார்.

இதைத் தடுக்க சென்ற அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் மீது சரமாரியாக அரிவாளால் தாக்கினர். இதில் 4 பேரும் பலத்த அடைந்தனர். மேலும் அவர்களுக்கு சொந்தமான 4 ஆடுகளும் அந்த நபர்கள் அரிவாளால் வெட்டியதில் 3 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.