வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட அமமுக நிர்வாகி கைது:

0
1

வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட அமமுக நிர்வாகி கைது:

திருச்சி சுந்தர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் . இவர் தனது சகோதரரின் மகனின் வேலைக்காக திருச்சி புத்தூரை சேர்ந்த திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியான  நாகராஜன் என்பவரை அணுகியுள்ளார்.

இந்நிலையில், நாகராஜன் தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ .20 லட்சம் பேசி கடந்த 2017 – ம் ஆண்டு ரூ .5 லட்சம் முன்பணமாக காசோலை மூலம் வாங்கினார் . பின்னர் மற்றொரு தவணையாக ரூ .7 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது . 

2

இந்நிலையில் இதுவரை வேலை வாங்கி தரவும் இல்லை கொடுத்த பணத்தை திருப்பித் தரவில்லை என செந்தில் குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று நாகராஜனை கைது செய்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.