திருச்சி அருகே முதியவரை மழையில் நனையாமல் காப்பாற்றிய இளைஞரின் நெகிழ்ச்சி செயல்:

0
1

திருச்சி அருகே முதியவரை மழையில் நனையாமல் காப்பாற்றிய இளைஞரின் நெகிழ்ச்சி செயல்:

Helios

திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே முதியவர் ஒருவர் நடக்க முடியாமல் தவழ்ந்த நிலையில் சென்று கொண்டிருந்தார். அச்சமயத்தில் மழை பெய்ய தொடங்கியது இதனை கண்ட பேருந்து நிறுத்தத்தில் இருந்த பள்ளி மாணவிகள் இருவர் குடை பிடித்தபடி முதியவரை நனையாமல் மெதுவாக அழைத்துச் சென்றனர்.

2

ஆனால் தண்ணீர் அதிகமாக இருந்ததாலும் மழை பெய்ததாலும், முதியவரால் தவழ்ந்து செல்ல முடியவில்லை. இதனைக் கண்ட அங்கிருந்த ஒரு இளைஞர் யாரும் எதிர்பார்க்காத நிலையில் அந்த முதியவரை தூக்கி சென்று மழையில் நனையாத வண்ணம் பாதுகாப்பான பகுதியில் அமர வைத்தார்.

பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி இருந்த நிலையில், முதியவரின் நிலைகண்டு உதவ எண்ணிய பள்ளி மாணவிகள் மற்றும் இளைஞரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.