திருச்சியில் போலீஸ் என கூறி பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்:

0
1

திருச்சியில் போலீஸ் என கூறி பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்:

Helios

திருச்சி திருவெறும்பூர் பெல் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (63). இவர் நேற்று முன்தினம் (31.10.2021) இரவு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் கலைஞர் அறிவாலயம் அருகே இரவு 11 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியே நின்றுகொண்டிருந்த இருந்த மர்ம நபர் ராஜ்குமாரை மறித்து போலீஸ் எனவும் போக்குவரத்து விதி மீறிய வந்ததாக கூறி பைக்கை பறிமுதல் செய்து உள்ளார்.

2

பைக்கை கோட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்வதாகும் நாளை (1.11.2021) காவல் நிலையம் வந்து பைக்கை எடுத்து செல்லுங்கள் எனவும் கூறியுள்ளார்.  இதனையடுத்து, ராஜ்குமார் பைக்கை கொடுத்து விட்டு ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். 

இந்நிலையில், நேற்று காலை கோட்டை காவல் நிலையம் சென்ற ராஜ்குமார் தனது இரு சக்கர வாகனத்தை தேடி உள்ளார். மேலும் இதுகுறித்து அங்கிருந்த காவல்துறையினரிடம் விசாரித்தார். அதன்பின்னரே போலீஸ் என கூறி ஏமாற்றி பைக் திருடு போனது தெரியவந்தது.

இந்நிலையில் தன்னை ஏமாற்றி பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர் மீது கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ராஜ்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.