பழங்குடியினர் பள்ளி விடுதிகளில் சேர அழைப்பு

0
1

பழங்குடியினர் பள்ளி விடுதிகளில் சேர அழைப்பு

Helios

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் செயல்படும் பழங்குடியினர் நலத் துறை பள்ளி விடுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 – ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை மாணவிகளும் 4 ஆம் வகுப்பு முதல் 12 – ஆம் வகுப்பு வரை பயிலும்  மாணவ , மாணவிகளுக்கு சேர்த்து கொள்ளலாம்.

2

இவ்விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு  உணவும் , உறைவிடமும் இலவசமாக அளிக்கப்படும் . இந்த விடுதிகளில் சேர பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ .2,50,000 / -க்கு மிகாமல் இருக்க வேண்டும் . விடுதிக்கும் மாணவரின் இருப்பிடத்திற்கும் 5 கி.மீ தூரம் குறையாமல் இருக்க வேண்டும் .

தகுதியுடைய மாணவ , மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமிருந்து  விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் . பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10.11.2021 – க்குள் விடுதிக் காப்பாளரிடம் சமர்பிக்க வேண்டும் .

இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு துறையில் உள்ள பழங்குடியினர் நல திட்ட அலுவலரை 9443837117 என்கிற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்திடலாம் . காலக்கெடுவுக்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.