திருச்சியில் 10,11ந் தேதிகளில் மாவட்ட தடகள போட்டிகள்

0
1

திருச்சியில் 10,11ந் தேதிகளில் மாவட்ட தடகள போட்டிகள்

திருச்சி மாவட்ட தடகள சங்கம், நீயூரோ ஒன் ,ஆப்பிள் மில்லட் குழுமங்கள் இணைந்து நடத்தும் இளையோருக்கான (இருபாலர்) ஸ்டேட் பாங்க் எஸ்.மோகன் நினைவு சுழற் கோப்பை  – 2021 என்ற பெயரில்  மாவட்ட தடகள போட்டிகள் வருகிற 10.11.2021 மற்றும் 11.11.2021 ஆகிய தேதிகளில் இருபாலருக்குமான தடகள போட்டிகள் திருச்சி அண்ணா செயற்கை ஒடுதள விளையாட்டரங்கில் நடத்தப்பட உள்ளது.

வெற்றி பெறும் முதல் 3 இடங்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. இப்போட்டியில் பங்கு பெறும் வீரர், வீராங்கனைகள் Excel முறையில் மின் அஞ்சல் trichydaa2022@gmail.com என்ற முகவரியில் வருகிற 07. 11. 2021 ஆம் தேதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும்  அதன் பின் வரும் பதிவு சேர்க்கைகள் ஏற்றுக்கொள்ள படமாட்டாது. 

2

இப்போட்டியின் முலம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில விளையாட்டு போட்டிகள் வருகிற 26, 27, மற்றும் 28 -11.21  தேதிகளில் நடைபெறும் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். 14 மற்றும் 16 வயது பிரிவில் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அனைத்து மாவட்ட போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவர்.

கொரோனா காலகட்டத்தில் அரசின் பரிந்துரை விதிகளை பின்பற்றி போட்டிகள் நடைபெறும். பதக்கப் பட்டியலில் முதலிடம் பெறும்  அணிக்கு (தனிதனி) ஒவ்வொரு பிரிவுவிற்கும் ஒட்டு மொத்தமாகவும் சிறந்த அணி தேர்வு செய்யப்பட்டு சுழற் கோப்பை வழங்கப்படும் என திருச்சி மாவட்டதடகள சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.