திருச்சியில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்தினருக்கு காசோலை:

0
1

திருச்சியில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் குடும்பத்தினருக்கு காசோலை:

Helios

திருச்சி மாநகர காவல் துறையில் பணியின் போது உயிரிழந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியை  மாநகர கமிஷனர் கார்த்திகேயன் வழங்கினார்.

2

திருச்சி மாநகர காவல்துறையில் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசில் பணிபுரிந்து வந்த எஸ்எஸ்ஐ முருகேசன் , கோட்டை போலீ சில் பணிபுரிந்த எஸ்எஸ்ஐ சேகரன் , எ.புதூர் குற்றப் பிரிவு போலீசில் பணிபுரிந்த எஸ்ஐ முருகையன் , காவல் கட்டுப்பாறையில் பணிபுரிந்து வந்த எஸ் எஸ்ஐ பிச்சைபிள்ளை ஆகியோர்  உடல்நிலை சரியில்லாமல்  கடந்த ஆண்டு மரணமடைந்தனர்

அவர்களின் வாரிசுதாரர்களுக்கு தமிழக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ .3 லட்சம் வீதம் மொத்தம் ரூ .12 லட்சம் வழங்க அரசு உத்தரவிட்டது . இதனையடுத்து இதற்கான காசோலையை நேற்று (2.11.2021) திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் மாநகர கமிஷனர் கார்த்திகேயன் அவர்களது குடும்பத்தினரிடம் வழங்கினார்.

3

Leave A Reply

Your email address will not be published.