8 மணி நேர உழைப்பு… 8 ஆயிரம் வருமானம்…!

0
1

8 மணி நேர உழைப்பு… 8 ஆயிரம் வருமானம்…!

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவு வகைகளில் சப்பாத்திக்கு முக்கிய இடம் உண்டு. சர்க்கரை நோய் பெருகியதை அடுத்து இரவு உணவாக பலரும் சப்பாத்தியை உண்கின்றனர். வீட்டில் ஒருவருக்கான தினமும் மாவு பிசைந்து சப்பாத்தி தயாரிப்பதென்பது பெரும்பாலோருக்கு சிரமமான வேலையாக இருக்கிறது. அந்த சிரமம் தான் நமக்கு வாய்ப்பு.!

சப்பாத்தி தயாரிப்பிற்கென்று மிஷின் உள்ளது. இந்த மிஷினில் ஒரு மணி நேரத்தில் பிரட்டும் தயாரிக்கலாம். இதனுடன் கட்டிங் மிஷினும் வாங்க வேண்டும். தயாரிப்பு மற்றும் கட்டிங் மிஷின்களுக்கென ரூ.3 லட்சம் வரை செலவிட வேண்டும்.

2

சப்பாத்திக்கு தேவையான தரமான கோதுமை மாவை மொத்தமாக கொள்முதல் செய்து கொள்வது நல்லது.வழக்கமாக நம் வீடுகளில் சப்பாத்தி தயாரிக்க கோதுமை மாவை பிசைவது போல் பிசைந்து சிறுசிறு உருண்டையாக்கிக் கொள்ளவும். சப்பாத்தி தயாரிக்கும் மிஷினில் தேவையான வெப்ப அளவை செட் செய்து சப்பாத்தி மாவு உருண்டையை அதனுள் போட்டால் சப்பாத்தி வெந்து கீழே வரும். இந்த மெஷினில் ஒரு மணி நேரத்திற்கு 1000 சப்பாத்திகளை தயாரிக்கலாம்.

தயாரிக்கப்பட்ட சப்பாத்திகளை சில்வர் கவர்களில் பேக் செய்து சூப்பர் மார்க்கெட் மற்றும் பலசரக்கு கடைகள் போன்றவற்றில் ஆர்டர் (order) பெற்று விற்பனை செய்யலாம், அதேபோல், மருத்துவமனைகள், சான்வெட்ஜ் கடைகள் உள்ளிட்ட வற்றிலும் சப்பாத்தி அமோகமாக விற்பனையாகும்.

சப்பாத்தி தயாரித்து விற்பனை செய்ய இந்திய உணவு தர ஆணையமான FSSAI-யிடம் உரிமம் பெற வேண்டியது கட்டாயம். அதனைத் தொடர்ந்து, சிறுதொழில் முனைவோர் சங்கத்திலும் உறுப்பினராக வேண்டும்.

இந்தத் தொழிலைத் தொடங்க குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் வரை முதலீடு தேவையாகும். சிறுதொழில் தொடங்க பல வங்கிகள் கடன் அளிக்கின்றன. தகுந்த பொருட்களைக் கொண்டு சுத்தத்தில் எவ்வித சமரசமும் செய்யாமல், தரமான சப்பாத்திகளைத் தயாரித்தால், விற்பனை களைகட்டும்.

இந்த மிஷினின் உதவியுடன் ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் சப்பாத்தி தயாரிக்க முடியும் என்பதால், அவற்றை தலா ரூ.2ற்கு விற்றால் கூட, ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டலாம். தயாரிப்புடன் விற்பனையிலும் கவனம் செலுத்தினால் தினமும் 8 மணி நேரம் உழைத்தால், 8 ஆயிரம் கிடைக்கும்.

3

Leave A Reply

Your email address will not be published.