திருச்சியில் சவ ஊர்வலத்தில் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைத்து ரகளை:

0
1

திருச்சியில் சவ ஊர்வலத்தில் ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைத்து ரகளை:

லால்குடி திருமணமேடு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார். இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (1.11.2021) திருச்சியில் உயிரிழந்தார். இதனையடுத்து, இவரது உடல் இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம் சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றது.

2

இந்நிலையில் சாந்தகுமார் உறவினர்கள் முதலில் உறையூர் பகுதியில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லும்படி ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கூறினர். அதன் பின்னர் மீண்டும் சொந்த ஊரான லால்குடிக்கு கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தனர்.

4

ஆனால் அரசு விதிப்படி ஒரு இடத்திற்கு மட்டுமே இலவச ஆம்புலன்ஸ் சேவை மூலம் உடல் கொண்டு செல்லப்படும் வேண்டுமென ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சாந்தகுமாரின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஆம்புலன்சில் இருந்த உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக லால்குடிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நடுரோட்டில் அரசு வாகனத்தை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்ட சாந்த குமாரின் உறவினர்கள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.