பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்:

0
1

பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்:

திருச்சி மாவட்ட ஆட்சியர் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக  கொண்டாட பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2

இதுகுறித்து அவர் கூறியாவது: தீபாவளி பண்டிகை நவம்பர் 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

4

இந்த தீபாவளி பண்டிகையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு அறிவித்துள்ள நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பொது மக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மருத்துவமனைகள் வழிபாட்டு தலங்கள், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்கள் ஆகிய இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு பாதுகாப்பாக ஒலி, விபத்தில்லா தீபாவளி கொண்டாட மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

3

Leave A Reply

Your email address will not be published.