தடுப்பூசி செலுத்தியதில் தமிழக அளவில் திருச்சி 6வது இடம்:

0
1

தடுப்பூசி செலுத்தியதில் தமிழக அளவில் திருச்சி 6வது இடம்:

திருச்சி மாநகரில் நேற்று 7 வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 371 இடங்களிலும் நகர்ப்பகுதிகளில் 250 இடங்களிலும் என மொத்தம் 621 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று (30.10.2021)  நடைபெற்றது.

இம்முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசியை ஆர்வத்துடன் செலுத்திக் கொண்டனர்.

2

திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற முகாமில் 65,585 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக அளவில் திருச்சி மாவட்டம் தடுப்பூசி செலுத்தியதில் 6-இடம் பிடித்துள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.