திருச்சியில் காவல் நிலையத்தில் கைவரிசையை காட்டிய பலே திருடன்:

திருச்சியில் காவல் நிலையத்தில் கைவரிசையை காட்டிய பலே திருடன்:
திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலைய தலைமைக் காவலராகப் பணிபுரிபவர் கோவிந்தராஜ். காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவருடைய இருசக்கர வாகனம் காணவில்லை.
இதனையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். ஆனால் கண்காணிப்பு கேமராவில் எவ்வித காட்சிகளும் பதிவாகவில்லை. இந்நிலையில் போலீசார் சுமார் 500 மீட்டர் தூரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்ட போது ஒரு மர்ம நபர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இந்த காட்சிகளை வைத்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். காவல்நிலையத்தில் பட்டபகலில் காவலரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
