திருச்சியில் இன்று முதல் பயன்பாட்டுக்கு வரும் தற்காலிக பேருந்து நிலையங்கள்:

0
1

திருச்சியில் இன்று முதல் பயன்பாட்டுக்கு வரும் தற்காலிக பேருந்து நிலையங்கள்:

Helios

தீபாவளி பண்டிகையை ஒட்டி திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் இரண்டு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

2

இந்த தற்காலிக பேருந்துகள் இன்று (31.10.2021) முதல் செயல்பாட்டுக்கு வருவதாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் முத்தரசு கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும் மன்னார்புரம் ரவுண்டானாவிலிருந்து இருந்து இயக்கப்பட உள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்தில் இருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசு பேருந்துகள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி ஏற்றி மன்னார்புரத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்லும்.

இதேபோல் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் சோனா மீனா தியேட்டர் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையிலிருந்து இயக்கப்பட உள்ளது. மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வழக்கம்போல் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.  மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மன்னார்புரம் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு சுற்றுப் பேருந்துகள் இயக்கவும் அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3

Leave A Reply

Your email address will not be published.