திருச்சியில் டாஸ்மாக் கடைகளில் அதிரடி ரெய்டு: கணக்கில் வராத 90 ஆயிரம் பறிமுதல்:

0
1

திருச்சியில் டாஸ்மாக் கடைகளில் அதிரடி ரெய்டு: கணக்கில் வராத 90 ஆயிரம் பறிமுதல்:

தீபாவளி பண்டிகையை ஒட்டி டாஸ்மாக் கடைகளில் மது பானங்களுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

2
4

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை மற்றும் கொட்டப்பட்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று (30.10.2.2021) இரவு 10 மணி அளவில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

இச்சோதனையில் 3 கடைகளில் கணக்கில் வராத மொத்தம் ரூ. 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து 3 டாஸ்மாக் கடைகளின் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.