திருச்சி பிராட்டியூர் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி ரெய்டு

0
1

திருச்சி பிராட்டியூர் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி ரெய்டு

திருச்சி பிராட்டியூர் பகுதியில் உள்ள திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பண்டிகை காலத்தையொட்டி அதிக அளவில் லஞ்சப் பணம் புழங்குவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

2
4

இதனையடுத்து, லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் நேற்று (29.10.2021) அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இச்சோதனையில், போலீசாரை கண்டு ஒருவர் தப்ப முயன்றார். இதனையடுத்து அவரை மடக்கிப் பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் புரோக்கர் சோமரசம்பேட்டை சேர்ந்த சேதுராஜன் (50) என்பதும் அவர் அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக ரூபாய் 60 ஆயிரம் பணம் வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீசார் அவரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.