திருச்சி சிறுகனூரில் பனைவிதைகள் நடும் விழா:

0
1

திருச்சி சிறுகனூரில் பனைவிதைகள் நடும் விழா:

Helios

தண்ணீர் அமைப்பு, மக்கள் சக்தி இயக்கம் மற்றும் மாறல் பவுண்டேசன் அமைப்பு, M.A.M ஸ்கூல் ஆஃ என்ஜினியரிங், M.A.M பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து சிறுகனூர் ஊராட்சி கொணலை கிராமத்தில் ஏரிக்கரைகளில் 2,000 பனைவிதைகளை விதைத்தனர்.

2

மாநில மரமான பனையை மீட்கவும் அதன் பொருளாதார வளங்கள் பற்றிய விழிப்புணர்வை ஊட்டவும் அழிவில் உள்ள பனைகளை காத்திடவும் நிலத்தடி நீர்வளம், நிலவளம், இயற்கை வளங்களை காத்திடவும், ஏரிக்கரைகளில் மண்ணரிப்பை தடுத்திடவும் பனை விதைக்கப்பட்டது. இந்நிகழ்வில் 250 மாணவர்கள் பங்கேற்று 2000 பனைவிதைகளை விதைத்தனர்.

இந்நிகழ்வில் தண்ணீர் அமைப்பின் மாணவர் மன்ற செயலாளர், கலைக்காவிரி நுண்கலைக்கல்லூரி தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் கி.சதீஷ்குமார், நிர்வாகக் குழு R.K.ராஜா, மாறல் பவுண்டேசன் விவேகானந்தன், MAM கல்விக் குழுமத்தின் இயக்குநர், எம்.ஏ.பீர்முகமது , முதல்வர் P. ரஞ்சித் குமார் , பாலிடெக்னிக் கல்லூரிசமுதல்வர் என்.பன்னீர்செல்வம் இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் கொணலை ஊராட்சி மன்றத் தலைவர் கீதா, இளையராஜா ஆகியோர் பங்கேற்று பனை நடவு செய்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.