திருச்சி அருகே சாலையில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தம்பதியினர்:

0
1

திருச்சி அருகே சாலையில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தம்பதியினர்:

திருச்சி மாவட்டம் மணிகண்டத்தை அடுத்த நாகமங்கலத்தைச் சேர்ந்த இருசக்கர வாகன விற்பனை முகவரான ஜ . குஞ்சுபிள்ளை (60). இவர் ரூ .50 ஆயிரம் பையை சாலையில் தவற விட்டார் . பல இடங்களில் தேடியும் பை கிடைக்காத நிலையில் இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .

2
4

இந்நிலையில் மணப்பாறை அடுத்த குமரம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. குடும்பத்துடன் மணப்பாறை திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியில் ஒரு பை கிடந்துள்ளது. அதில் ரூ.50 ஆயிரம் பணம் இருந்துள்ளது.

இதனைக் கண்ட அந்த தம்பதியினர் பணப்பையை ராஜீவ் காந்தி மணப்பாறை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த பணம் வாகன விற்பனை முகவருடையது என்பது தெரியவந்தது. இந்நிலையில் அவரை அழைத்து பணத்தை ஒப்படைத்தனர். பணத்தை நேர்மையாக ஒப்படைத்த குடும்பத்தினரை போலீசார் பாராட்டி கௌரவித்தனர்.

3

Leave A Reply

Your email address will not be published.