இப்படித்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் – பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்புத்துறையினர் வகுப்பு !

0
1

திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்காவில் அமைந்துள்ள ஶ்ரீ ஜெயேந்திரா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பாதுகாப்பு வழிமுறைகளை செய்து காண்பித்தனர்.


மேலும் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி பட்டாசுகளை எப்படி கையாள்வது என்று பட்டாசுகள் வெடிக்கும் பொழுது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தும் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினர். மேலும் தீ தடுப்பு ஒத்திகை, தீ ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும், தீயணைக்கும் வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் செய்து காண்பித்தனர். இதற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் துறையின் அதிகாரி முனியாண்டி தலைமை வகித்தார்.

3

Leave A Reply

Your email address will not be published.