வாளசிராமணி ஊராட்சி தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு: 

0
1

வாளசிராமணி ஊராட்சி தலைவரை கண்டித்து உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு: 

தாத்தையங்கார் பேட்டை ஒன்றியம் வாளசிராமணி ஊராட்சித் துணைத் தலைவர் கமல்ராஜ் தலைமையில் ஊராட்சி உறுப்பினர்கள் நேற்று (25.10.2021) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் ராஜினாமா செய்யப் போவதாக மனு அளித்தனர்.

2
4

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: வாளசிராமணி ஊராட்சி தலைவர் மகேஸ்வரி. இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்தில் சரிவர அடிப்படை வசதிகளை அமைத்துத் தரவில்லை. மேலும் ஊராட்சி நிர்வாகத்தில் இவரது கணவர் மற்றும் மாமனார் தலையீடு அதிகமாக உள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக முடிவு எடுத்துள்ளோம் என கூறினர்.

3

Leave A Reply

Your email address will not be published.