தீபாவளியையொட்டி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி விற்பனை கண்காட்சி

0
1

தீபாவளியையொட்டி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி விற்பனை கண்காட்சி

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ” சிறப்பு கைத்தறிக்  கண்காட்சி  மற்றும் விற்பனையினை ‘ மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, நேற்று (25.10.2021 ) குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார் .

2

பின்னர் அவர் கூறியதாவது : 2021 – ஆம் ஆம் ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் இக்கண்காட்சி மற்றும் விற்பனையானது  ( 25.10.2021 ) தொடங்கி வருகின்ற 03.11.2021 வரை ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக ) நடைபெறும் .

4

தமிழ்நாட்டில் ஐவுளித்துறையில் புகழ்பெற்ற கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி பருத்தி சேலைகள் , ஆர்கானிக் காட்டன் சேலைகள் , மென்பட்டு சேலைகள் , கோரகாட்டன் சோகைள் , பெட்ஷீட்கள் மற்றும் துண்டு இரகங்கள் என சுமார் ரூ .50 இலட்சம் மதிப்பில் கண்காட்சிப்படுத்தப்பட்டுள்ளன .

இக்கண்காட்சியில் 20 – க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் கலந்துகொண்டுள்ளன . இக்கண்காட்சி காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி நடைபெறும் . மேற்படி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜவுளி இரகங்களின் விற்பனைக்கு தமிழக அரசினால் 30 % தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது  எனக் கூறினார்.

இந்நிகழ்வில் , திருச்சிராப்பள்ளி சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குநர் பெ.சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

3

Leave A Reply

Your email address will not be published.